மதுரை:மதுரையில் கொரோனா பலி நேற்று 100ஐ தாண்டியது. தினமும் 250 முதல் 350 வரை இருந்த பாதிப்பு 14 நாட்களுக்கு பின்னர் 200க்கு கீழே வந்தது.மதுரையில் நேற்று 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் பகுதிகளில் சென்னையிலிருந்து வந்தவர்கள் உட்பட 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டிக்குள் வெளி நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 149 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். 43 பேர் புறநகர்வாசிகள். மொத்த பாதிப்பு 5482 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 47 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 4131 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த இரு வாரங்களாகவே மதுரையில் பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது.

ஜூன் 26ல் 190 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு பாதிப்பு தினமும் 200; 300 என எகிறி கொண்டே வந்தது. 14 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 200க்கு கீழே வந்துள்ளது. இது மதுரை வாசிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.இன்னொருபுறம் கொரோனா பலி சதம் அடித்துள்ளது. இதுவரை 101 பேர் இறந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE