பொது செய்தி

இந்தியா

லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Indian Air Force, Apache helicopters, Apache


புதுடில்லி: லடாக் எல்லையில் நடத்தப்படும் ரோந்துப் பணியில், அமெரிக்காவிடமிருந்து வாங்கிய, 'அப்பாச்சி, சினுாக்' ரக ஹெலிகாப்டர்களை, இந்திய விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.அமெரிக்காவின், 'போயிங்' நிறுவனத்திடமிருந்து, 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும், 15 சினுாக் ரக ஹெலிகாப்டர்களையும் வாங்க, இந்தியா கடந்த, 2015ல், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.


latest tamil news



அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், '70 எம்எம் ஹைட்ரா ராக்கெட் மற்றும் ஸ்டிங்கர்' ஏவுகணைகளை தாங்கிச் சென்று, தாக்கும் திறன் கொண்டது. இதையடுத்து, 17 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும், 15 சினுாக் ரக ஹெலிகாப்டர்களும், கடந்த ஆண்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டன.சமீபத்தில், லடாக் எல்லையில், சீன ராணுவத்தின் அத்துமீறிய செயலால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இப்பகுதியில், கண்காணிப்பு பணியில், அப்பாச்சி மற்றும் சினுாக் ரக ஹெலிகாப்டர்களை, இந்திய விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.இந்நிலையில், ஒப்பந்தப்படி, மீதியுள்ள, ஐந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்களை உடனடியாக வழங்க போயிங் நிறுவனத்துக்கு, இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஐந்து அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும், கடந்த மாத இறுதியில், போயிங் நிறுவனம், இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-ஜூலை-202010:08:26 IST Report Abuse
RajanRajan சீன இந்தியாவை பற்றி பல முறை சிந்திக்க வைத்து விட்டார் மோடி. நமது வெளியுறவு கொள்கை மிகவும் திடமானது நுட்பமானது என்பதையும் உலகநாடுகளுக்கு புரிய வைத்துள்ளார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-ஜூலை-202007:12:35 IST Report Abuse
blocked user இது நமக்கு பெரும் பலம். லடாக் பகுதிகளில் இது போன்ற ஹெலிக்காப்டர்கள்தான் ஆயுதங்களை தாங்கி தாக்குதல்களை நடத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X