லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்| Indian Air Force receives complete delivery of Apache helicopters | Dinamalar

பொது செய்தி

இந்தியா

லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (2)
Share
Indian Air Force, Apache helicopters, Apache


புதுடில்லி: லடாக் எல்லையில் நடத்தப்படும் ரோந்துப் பணியில், அமெரிக்காவிடமிருந்து வாங்கிய, 'அப்பாச்சி, சினுாக்' ரக ஹெலிகாப்டர்களை, இந்திய விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.அமெரிக்காவின், 'போயிங்' நிறுவனத்திடமிருந்து, 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும், 15 சினுாக் ரக ஹெலிகாப்டர்களையும் வாங்க, இந்தியா கடந்த, 2015ல், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.


latest tamil news



அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், '70 எம்எம் ஹைட்ரா ராக்கெட் மற்றும் ஸ்டிங்கர்' ஏவுகணைகளை தாங்கிச் சென்று, தாக்கும் திறன் கொண்டது. இதையடுத்து, 17 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும், 15 சினுாக் ரக ஹெலிகாப்டர்களும், கடந்த ஆண்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டன.சமீபத்தில், லடாக் எல்லையில், சீன ராணுவத்தின் அத்துமீறிய செயலால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இப்பகுதியில், கண்காணிப்பு பணியில், அப்பாச்சி மற்றும் சினுாக் ரக ஹெலிகாப்டர்களை, இந்திய விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.இந்நிலையில், ஒப்பந்தப்படி, மீதியுள்ள, ஐந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்களை உடனடியாக வழங்க போயிங் நிறுவனத்துக்கு, இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஐந்து அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும், கடந்த மாத இறுதியில், போயிங் நிறுவனம், இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X