சீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: அமெரிக்க செனட்டர்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

வாஷிங்டன்: 'எல்லையில், சீன ஆக்கிரமிப்பை, இந்தியா துணிச்சலாக எதிர்ப்பது பெருமைக்குரியது. இதன் மூலம், சீனாவை எதிர்கொள்வதில் அச்சம் தேவையில்லை என்பதை, மற்ற நாடுகள் உணர்ந்திருக்கும்' என, அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



கிழக்கு லடாக் அருகே, இந்திய -- சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அமைதிப் பேச்சில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதை அடுத்து, சீனப் படையினர், பின் வாங்கினர். இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க குடியரசுக் கட்சியை சேர்ந்த, செனட்டர் ஜான் கென்னடி, நேற்று முன் தினம் கூறியதாவது:சீனாவை, எந்த நாடுமே நம்பத் தயாராக இல்லை. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா உள்ளது. எனவே, அந்நாட்டை எதிர்க்க, மற்ற நாடுகள் அஞ்சுகின்றன.தற்போது, சீனாவுக்கு எதிராக இந்தியா நிற்கிறது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், சீனாவுக்கு எதிரான தங்கள் நிலைபாட்டை தெளிவுபடுத்தி உள்ளன.


latest tamil news



விதிமுறைகளை மதிக்கவில்லை என்றால், எந்த நாடும், சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளாது என்பதை, அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அதை நிறைவேற்ற வேண்டும்.சீனாவைக் கண்டு அஞ்சி, எல்லா நாடுகளும் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. இந்தியாவைப் போன்ற சில விதிவிலக்குகளும் உள்ளன. எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில், சீனாவுக்கு எதிராக நின்ற, பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது.இதன் மூலம், சீனாவைக் கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை என்பது, பிற நாடுகளுக்கு, விளங்கி இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
11-ஜூலை-202017:22:53 IST Report Abuse
Raja Narasiman Vivek நீ ஏன் உலக சுகாதார அமைப்பை விட்டு வெளியே வந்தாய் அதை முதலில் சொல்லுங்கள குறை இருந்தால் தீர்க்கப்படவேண்டும் இப்படி ஒரே அடியாக வெளியேறிவிட்டால் பிரச்சினை முடிந்து விடுமா நீங்கள் குறை சொல்ல கூடாது
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
11-ஜூலை-202016:21:36 IST Report Abuse
r ganesan நிஜமாகவே சீனரகள் எல்லைக்கோட்டுக்கு அந்த பக்கம் பொய் விட்டார்களா. இதில் கொஞ்சம் சந்தேகம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். வருகின்ற வெளி நாட்டு செய்திகள் அப்படி சிந்திக்க வைக்கின்றன.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-ஜூலை-202015:33:45 IST Report Abuse
Mirthika Sathiamoorthi என்ன செனட்டர் சாரூ உங்களுக்கும் டிக் டாக் புடிக்காதா? பாராட்டெல்லாம் பலமா இருக்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X