பொது செய்தி

இந்தியா

போலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
tirumala, tirupati, tirupati devasthanam, திருமலை, திருப்பதி, தேவஸ்தானம், போலி இணையதளங்கள்

திருப்பதி: 'திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு வழியாக அளித்து வருகிறது. இதற்காக தேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிந்தது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு அலுவலர்கள் 20க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போலி இணையதள செயல்பாட்டாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து பக்தர்கள் தேவஸ்தானத்திற்குரிய இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் ஆய்வு


ஆந்திர மாநில அறநிலைத்துறை அமைச்சர் சீனிவாஸ் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின் திருமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேவஸ்தானம் மேற்கொண்டுள்ள சுகாதார பணிகளை பார்வையிட்டார்.


latest tamil news


பின் அவர் கூறியதாவது: நாட்டில் உள்ள கோவில்களில் எங்கும் இல்லாத விதம் திருமலையில் சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.முடி காணிக்கை செலுத்தும் பகுதிகள் அன்னதான கூடம் வாடகை அறை உள்ளிட்ட இடங்களை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி திரவத்தால் சுத்தப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஜூலை-202011:01:18 IST Report Abuse
A.George Alphonse ஏழுமலையானுக்கே அல்வாவா?இவர்கள் நிஜமான சாத்தான்கள். உறுப்பிடவே மாட்டார்கள். விளங்கவும் மாட்டார்கள்.
Rate this:
Cancel
nms - Madurai,இந்தியா
11-ஜூலை-202008:52:48 IST Report Abuse
nms கட்டாயம் கவனிக்க பட வேண்டிய விஷயம். போலி தளங்கள் இதர மதத்தினரை அனுமதிக்க நூதன முறை கடை பிடிக்கலாம். மத்திய சர்க்கார் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றல் அயோத்தி கோயில் போல், இதுவும் வேறு மத (கிறிஸ்டின்) தலமாக மாரி விடும். அனால் YSR ரெட்டி கதை எல்லோருக்கும் தெரியும். பெருமாள் இடம் விளையாட வேண்டாம்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11-ஜூலை-202008:45:07 IST Report Abuse
தமிழ் மைந்தன் திருப்பதியில் உண்டியல் பற்றி பேசியவுடனே உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்......இவர்கள் உண்டியலுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள்......ஆனால் கம்பெனி தகவல் தொழில்நுட்ப திருடர்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டது..........ஆகாயத்தில் பல லட்சம் கோடிகள் கொள்ளையடித்த கம்பெனி...என்பது தெரியாதா?.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X