பொது செய்தி

இந்தியா

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி; நாட்டில், 11 மாநிலங்களில், 'பிளாஸ்டிக்' கழிவுகளை பயன்படுத்தி, 1 லட்சம் கி.மீ., துாரமுள்ள சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நம் நாடு, தினமும், 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதில், 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் நிலையில், மீதமுள்ளவை நிலத்தில் சேருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுவதால், காற்று மாசடைகிறது. தண்ணீரில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கடலில் சேர்கின்றன.எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள், சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2016ல் அறிவித்தார்.



latest tamil news


அதை தொடர்ந்து, முதல் முறையாக, 2018ல், ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியது. இதே மாதிரி, ஜம்மு - காஷ்மீரில், 270 கி.மீ., சாலை அமைக்க, பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, 11 மாநிலங்களில், 1 லட்சம் கி.மீ., சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இது இரு மடங்காகும் என தெரிகிறது. ஒரு கி.மீ., சாலை அமைக்க, 9 டன், 'தார்' மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 1 டன் தாரின் கொள்முதல் விலையான, 30 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுகிறது


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Chennai,இந்தியா
12-ஜூலை-202016:35:26 IST Report Abuse
Baskar இதை பிரசுரித்த தினமலர் நன்றி . இந்த ரோடு எப்படி சாதனை புரிகிறது என்று பார்ப்போம் . ஆனால் தமிழ் நாட்டில் இதெல்லாம் செல்லுபடி ஆகாது . ரோடு போடுவதற்கு முன்பே ரோடு தோண்டுவதுற்கும் காண்ட்ராக்ட் வழங்குகின்றனர் .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஜூலை-202012:53:54 IST Report Abuse
Sampath Kumar ரோடு போட்டாச்சு சரி இதுக்கு பிறகு இது என்ன பண்ண காத்து இருக்கு என்று பொறுத்தான் பார்க்க வேண்டும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜூலை-202017:49:10 IST Report Abuse
Endrum Indian மிக நல்ல செயல் 1) ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு இடர்ப்பாடு இந்த பிளாஸ்டிக் நன்றாக கலவையோடு ஒருமித்ததாக இருக்குமா இல்லை இது எதனுடனும் சேராமல் இருக்குமா அப்படி இல்லாத பட்சத்தில் இந்த ரோடு சில நாட்களில் சின்ன சின்ன விரிசல் விட்டு பிரிந்து விடும். 2) ரோடு காண்ட்ராக்ட் என்றால் தரமற்றதாக மட்டுமே இருக்கும் என்று இந்தியாவில் முடிவான ஒரு சமாச்சாரம் அப்போது தான் இதில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு கிம்பளம் கொடுக்கமுடியுமாம் ரோடு கான்ட்ராக்டர்களால் இது இல்லாத பட்சத்தில் ஒரு நல்ல திருப்பு முனை என்றே சொல்லலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X