சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா' அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.latest tamil newsசிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்' கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் பார்லி தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒரு ஓட்டு சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை ஓட்டளித்தனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒட்டு சாவடியில் முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன. மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக ஓட்டளித்தனர்.


latest tamil news

மீண்டும் ஆட்சி:


இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் 'பீப்பிள் ஆக் ஷன்' கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இக்கட்சி, 61.24 சதவீத ஓட்டு விகிதம் பெற்றது. இது கடந்த 2015ல் பெற்ற ஓட்டு விகிதத்தை (69.9%) விட குறைவு.


latest tamil newsவெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் லீ செய்ன் லுாங் கூறுகையில், பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி. ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில், மக்கள் எதிர்நோக்கிய வலி, பதற்றத்தையும் முடிவுகள் காட்டுகிறது' என்றார்.

எதிர்கட்சியான 'வொர்க்கர்ஸ் பார்ட்டி' கட்சி, 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரித்தம் சிங், பார்லி., எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATESAN - Chennai,இந்தியா
11-ஜூலை-202017:32:55 IST Report Abuse
VENKATESAN The election in Singapore is just conducted to elect the Ruling party. The Democratic rights of opposition or any one who raises finger is curtailed still opposition is winning 10 seats is good sign. There is lowering popularity of ruling party also
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
11-ஜூலை-202015:02:59 IST Report Abuse
s t rajan Well administered police state.worth emulating for the good of the people
Rate this:
Cancel
11-ஜூலை-202014:19:02 IST Report Abuse
நக்கல் அங்க யாரும் தோற்ற பிறகு EVMஐ குறை சொல்ல மாட்டார்களா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X