வன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்'

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: பயிர்களை காப்பாற்ற, வன விலங்குகளை கொடூரமாக கொலை செய்வதற்கு எதிரான வழக்கில், மத்திய மற்றும் 13 மாநில அரசுகள் பதில் தர, 'நோட்டீஸ்' அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



கேராளவின் அமைதிப்பள்ளத்தாக்கு பகுதியில், விவசாயிகள் சிலர், தங்கள் நிலத்தில் வன விலங்குகள் புகுந்து விடாமல் தடுக்க, அன்னாசி பழங்களில் வெடி பொருட்களை வைத்தனர். இவற்றில், ஒரு பழத்தை சாப்பிட்ட, கர்ப்பிணி யானையின் வாய் பகுதியில் வெடி வெடித்ததால் உயிரிழந்தது.இது போன்ற வன விலங்குகளின் உயிரிழப்பை தடுக்கக் கோரி, சுபாம் அவஸ்தி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு பகுதியில், விவசாயிகள் தங்கள் பயிர்கள், தோட்டங்களை, வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, பழங்களில் வெடிபொருட்கள், கண்ணி வெடிகள், கூர்மையான குச்சிகளை பதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இது போன்ற காட்டுமிரண்டித்தனமான நடவடிக்கைகளை, பல நாடுகள் தடை செய்துள்ளன. போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விலங்குகளை எப்படி கையாள்வது என தெரியாததால், கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், இது போன்ற நிலை தொடர்கிறது.வனத்துறையினரின் பற்றாக்குறையும், இதற்கு காரணமாக உள்ளது.

இதுபோல் வன விலங்குகள் கொல்லப்படுவது, அவற்றை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள, அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது.எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை முறையாக கடைப்பிடிக்கவும், வனத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பவும், மத்திய, மாநில அரசுகளுக்கு, உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனு குறித்து, மத்திய அரசு, கேரளா, தமிழகம் உள்ளிட்ட, 13 மாநில அரசுகள் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


latest tamil news



ஒரு மாதத்தில் 30 யானைகள் பலி


ட்டில், மே, 27 முதல், ஜூன், 29 வரை, வனத்தில் இருந்த மற்றும் சிறை பிடிக்கப்பட்ட, 30 யானைகள் பலியாகி உள்ளன. யானைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்த, தேசிய அளவிலான குழு அமைக்க வேண்டும் என, விலங்கு பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், விசாரணை அதிகாரி, வனத்துறையினர், வன விலங்கு குற்ற நடவடிக்கை அதிகாரிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், விஞ்ஞானிகள் இடம்பெற வேண்டும் என, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஜூலை-202020:35:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மிக நல்லாத்தான் உள்ளாள்கள் திருடிகள் இப்படியும் ஓர் பொழப்பு நடத்த பிறந்துள்ளாள்களே என வெட்கப்படவேண்டியுள்ளது. இவளெல்லாம் சுட்டு தள்ளனும்... அப்போதான் இவ்வாறான வேலை செய்ய யாரும் முன்வர தயங்குவர்...
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
11-ஜூலை-202016:22:24 IST Report Abuse
Raj அரசாங்கமே காட்டை காப்பாற்ற வேண்டும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-202013:35:34 IST Report Abuse
Lion Drsekar ஒரே வரியில் இதற்க்கு பதில் கூறவேண்டுமென்றால் இதற்கும் ஒரு " குழுவா "".... வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X