'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
ram vilas paswan, Made in India, Made in China

புதுடில்லி: தங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரங்களை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்துவது கட்டாயம் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை பொருளில் பதிவிட்டு தெரிவிக்க வேண்டும். இந்த சட்டம் 2018 முதல் அமலில் உள்ளது. இந்த விதிகளுக்கு அனைத்து நிறுவனங்களும் கட்டுப்படும். இதுகுறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


பொருளின் எம்.ஆர்.பி., காலாவதி ஆகும் தேதி, அதன் அளவு, எடையுடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவலும் இடம் பெற வேண்டும். அதற்கு உட்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:48:46 IST Report Abuse
S. Narayanan சீனா பொருட்களை மக்கள் தடை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
11-ஜூலை-202017:49:15 IST Report Abuse
Darmavan நடவடிக்கை என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-ஜூலை-202017:40:23 IST Report Abuse
வெகுளி சீன பொருட்கள் உள்ளே வந்தால் நிச்சயம் விற்கும்.... மலிவு விலை பொருட்களை இந்தியாவில் விரும்பி வாங்குவார்கள் என்பது சீனாவுக்கு நன்கு தெரியும்...... தேசப்பற்றால் சீன பொருட்களை தவிர்ப்பது தற்காலிக தீர்வுதான்.... தரமான பொருட்களை மலிவான சிலையில் இங்கேயே தயாரிப்பது தான் நிரந்தர தீர்வாகும்.... அதற்க்கு பெரும் அளவு கல்லூரி மாணவர்கள் அரசு வேலை மென்பொறி வேலை என்று செல்லாமல் சுய தொழில் தொடங்க வேண்டும்.... காலப்போக்கில் இது நடக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X