பொது செய்தி

இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர்: புதிய பார்லி., கட்டட பணிகள் நிறுத்தம்

Added : ஜூலை 11, 2020
Share
Advertisement
parliament, winter session, monsoon session, குளிர்கால கூட்டத்தொடர்,   பார்லிமென்ட், கட்டட பணிகள், நிறுத்தம்

புதுடில்லி: பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவிருப்பதையொட்டி புதிய பார்லி., கட்டடம் கட்டும் பணிகள் ஜூலை 14-ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லியில், 'இந்தியா கேட்' மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு இடைப்பட்ட பகுதியில் ரூ,922 கோடி செலவில் புதிய பார்லிமென்ட் கட்டடம், மத்திய அரசு அலுவலகங்கள் கட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022ல் புதிய பார்லி., கட்டடம் உருவாக்கப்படும் எனவும், தலைமை செயலக அலுவலகங்களுக்கான புதிய கட்டடம், 2024ல் முடிவடையும் என, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செய்து வருகிறது. 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரை, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடத்தவும், 2024 மார்சில், மத்திய தலைமை செயலகம் செயல்பாட்டுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டது.


latest tamil news




இந்நிலையில் விரைவில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும்பணிகளை ஜூலை 14-ம் தேதியுடன் நிறுத்தி வைக்கவும் கூட்டத்தொடர் நிறைவைடைந்த பின்னர் தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X