கொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா சென்றது நிபுணர்கள் குழு

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
who, world health organisation, coronavirus, china, covid 19, coronavirus china outbreak, கொரோனா, ஆய்வு, சீனா,  நிபுணர்கள் குழு, உலக சுகாதார மையம், அமெரிக்கா

பீஜிங்: கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் நேற்று (ஜூலை 10) சீனா சென்றடைந்தனர்.

சீனாவின் வூஹானில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரசால் இதுவரை 1 கோடியே 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 5,62,011 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் உருவானது குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு சேர்ந்து கொண்டு கொடிய வைரசை பரப்பியதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தி, அந்த அமைப்புக்கு வழங்கிய நிதியை நிறுத்தியதுடன். அமைப்பிலிருந்து முறைப்படி அமெரிக்கா வெளியேறிவிட்டது.


latest tamil news


கொரோனா வைரஸ் உருவானது குறித்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் உலக சுகாதார சபையில் உலக நாடுகள், கோரிக்கை வைத்தன. இதையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சீனா விரைந்துள்ளது. நேற்று, பீஜிங் சென்ற குழுவினர், அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:46:21 IST Report Abuse
S. Narayanan இதை முன்பே செய்திருக்கலாம்.
Rate this:
Cancel
சோலைபட்டி பார்த்திபன் சிலோன் போன கனி.. திருமா போல...... நீங்களும் report கேடுங்க....ok
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
11-ஜூலை-202014:43:45 IST Report Abuse
venkatan It's very very...sorry too late..fris...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X