பேச்சு, பேட்டி, அறிக்கை| Politics in Tamil Nadu: Speeches, interview and statements | Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020
Share
tamil nadu, politics, tn news, coronavirus lockdown

'இப்படி திடீரென கேட்டால், ஸ்டாலின் என்ன செய்வார்; கொஞ்சம், காலக்கெடு கொடுங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு), காங்.,கைச் சேர்ந்த, கராத்தே தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி நிறைய...:

'போரடிக்குதுங்க... கொஞ்சம், 'டாபிக்'கை மாத்திப் பேசுங்களேன்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பொருளாதார அளவுகோலைப் பின்பற்றுவது, சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கை. எரிந்த வீட்டில் இழுத்தது லாபம் என்பது போன்று, மத்திய அரசு கொரோனாவைக் காரணம் காட்டி, தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை, ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, நிறைவேற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும்.

'உங்களின் கோரிக்கை, கொஞ்சம், 'லேட்' ஆக இருக்குதே; நிறைய கட்சிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி விட்டனவே...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர், வாசன் அறிக்கை:


latest tamil news




ஊரடங்கு காரணமாக, இயங்காமல் இருக்கும் தனியார் ஆம்னி பஸ்களுக்கும், நகர - புறநகர் பயணியர் பஸ்களுக்கும், ஆறு மாத காலத்திற்கு, சாலை வரி வசூலிக்க, விலக்கு அளிக்க வேண்டும். வங்கியில், ஆறு மாதங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்கு, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

'இப்படித் தானே, மூன்று மாதங்களுக்கும் மேலாக, உங்களை படுத்தி எடுக்கின்றனர்...' என, ஆறுதலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேட்டி:

'மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை; முதல்வர், பிரதமர் பதவி விலக வேண்டும், படுக்கை, குடிநீர் வசதியில்லை' என, இருட்டு அறையில் இருந்து கொண்டு, தி.மு.க.,வினர் அறிக்கையை வெளியிட்டு, மக்களை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., எங்களை பாராட்ட வேண்டாம்; குறை சொல்லாமல் இருந்தால் போதும்.

'வழக்கமாகவே, அரசை கண்டிப்பீர்கள்; இப்போது, சும்மா இருப்பீர்களா...' என, எதிர்கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிக்கை:

அனைவருக்கும் பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, தாலுகா அலுவலகத்தை திறந்து, ஜமாபந்தி நடத்த வேண்டும் என, கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்காமல், மூன்று அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

'இப்படி திடீரென கேட்டால், ஸ்டாலின் என்ன செய்வார்; கொஞ்சம், காலக்கெடு கொடுங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு), காங்.,கைச் சேர்ந்த, கராத்தே தியாகராஜன் அறிக்கை:

சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது, அவரது நண்பர் ராஜா சங்கருக்காக, மேயருக்கான சிறப்பு அதிகாரி, 'பாலங்கள்' என்ற ஒரு புதிய பதவியை உருவாக்கி, அதில் நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனம் தொடர்பாக, எந்த அரசாணையோ அல்லது மன்ற ஒப்புதலோ கிடையாது. இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம் என, ஸ்டாலின் சொன்னால் நல்லது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X