அரசியல் செய்தி

தமிழ்நாடு

செமஸ்டர் தேர்வு குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம்; இபிஎஸ் கோரிக்கை

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Tamil nadu CM, EPS, Semester Exam, Colleges, Universities, Minister, தமிழகம், கல்லூரி, பல்கலை, செமஸ்டர், தேர்வுகள், மாநிலஅரசு, அதிகாரம், முதல்வர், இபிஎஸ், மத்திய அமைச்சர், கடிதம்

சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அறிவித்தது. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news


கடிதத்தில், ‛கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும். செமஸ்டர் தேர்வு குறித்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,' என வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news



வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ‛சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வகையில் ஈரானில் சிக்கித் தவித்த 681 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மூலம் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த கப்பல் கடந்த 1ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

இந்நிலையில், ஈரானில் மேலும் 40 தமிழக மீனவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் சென்ற கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் 40 பேரையும் விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:44:04 IST Report Abuse
S. Narayanan எல்லா மாநிலங்களிலும் கான்செல் செய்து விட்டார்கள் இங்கு முடிவெடுக்க முடியவில்லை.
Rate this:
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
11-ஜூலை-202018:41:43 IST Report Abuse
CSCSCS இறுதி ஆண்டில் இரண்டு எழுத்து தேர்வுகள் மற்றும் "ப்ராஜெக்ட் viva" மட்டுமே . மொத்தம் "3" நாட்கள் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தாலே போதும் . எதற்கு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் . தகுந்த பாதுகாப்போடு சீக்கிரமே நடத்தி முடிப்பதே நல்லது . தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாதீர் .
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
11-ஜூலை-202017:47:52 IST Report Abuse
Raj பத்தாம் வகுப்பு தேர்வை என்ன செய்வதென்றே தெரியாமல் வாரத்திற்கு ஒரு அறிவிப்பு விட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் நீங்கள் படுத்தின பாடு ... உங்களுக்கு எதுக்கு அந்த வேலை இருக்கவே இருக்கு நீதி மன்றம் ... நீதிமன்றமே ஆட்சி செய்யட்டும் நீங்கள் ரொம்ப கஷ்டப்படவேண்டாம் ஓய்வெடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X