பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு: சுகாதார செயலர்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus, covid 19, tamil nadu, health secretary, radhakrishnan ias, கொரோனா, சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன், பிளாஸ்மா வங்கி,

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன. தட்டுப்பாடின்றி படுக்கைகள் கிடைக்கின்றன. மாவட்டந்தோறும் கூடுதல் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், மருத்துவமனை அல்லாத பகுதிகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news



தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தொடரந்து அதிரிக்கப்படுகின்றன. . பிளாஸ்மா வங்கி துவங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு இந்திய மருத்துவத்தை பயன்படுத்துகிறோம். விரும்பும் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சை தரப்படுகிறது. 12 வகையான சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. ரெம்பசிவர் மருந்து தாராளமாக கிடைக்கிறது.சென்னையில் மக்கள் ஒத்துழைப்பால் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
11-ஜூலை-202017:33:41 IST Report Abuse
Srinivas ஒவ்வொரு அமைச்சராக கொரோனாவின் பிடியில் சிக்கியது எப்படி? அதுவும் செல்லூர் விஞ்ஞானி சிக்கியதுதான் நகைப்பின் உச்சக்கட்டம். எங்களுக்கு கொரோனா வராது என்று முழங்கியவர்கள் இப்போது வெளியில் சொல்லக்கூட முடியாத சூழ்நிலை. இதைத்தான் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்று சொல்லும் பழமொழிக்கு உதாரணம். மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏன் கொரோனா வருகிறது?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
11-ஜூலை-202016:52:55 IST Report Abuse
vnatarajan இரவு பகல் தூக்கமின்றி ஒய்வு இல்லாமல் கொரோனாவை ஒழிப்பதற்கு பாடுபடும் திரு டாக்டர் ராதாகிருஷ்ணனுடைய விடா முயற்சிக்கு கண்டிப்பாக கடவுள் அவருக்கு துணை நிற்பார்.. அவருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
11-ஜூலை-202015:55:38 IST Report Abuse
Baskar Thiru. ராதாகிரிழ்நன் அவர்களே தமிழகம் உங்களையும் இந்த அரசையும் தான் நம்பி உள்ளது. எப்படியாவது இந்த கோரோனோவை ஒழித்து கட்டுங்கள். உங்களின் விடாமுயற்சி வீணாய் போவது. உங்களுக்கு கடவுள் அருளும் மக்களின் ஆதரவும் என்றும் உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X