அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள்: சரத்பவார்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
Sharad Pawar, politics, ncp, ncp president, Leaders, politicians, political party, சரத்பவார், மக்கள், அரசியல்வாதிகள், புத்திசாலிகள்

மும்பை: மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், பாஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், மீண்டும் நான் திரும்பி வருவேன் எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ‛அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள்; எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது,' என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கூறினார்.


latest tamil newsமஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவுக்கு நேர்காணல் அளித்துள்ளார். இதுவரை 'சாம்னா'வில், பால்தாக்ரே, உத்தவ் தாக்ரே இருவர் நேர்காணல் மட்டுமே வந்துள்ள நிலையில் முதல் முறையாக சரத்பவார் நேர்காணல் வந்துள்ளது. அவர் கூறியதாவது:

ஜனநாயகத்தில், நாம் எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது. நீங்கள் வாக்காளர்களைத் துச்சமாக மதித்தால், வாக்காளர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சக்திவாய்ந்த, புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா, வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் அர்த்தம், ஜனநாயக உரிமை அதாவது, அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள்.


latest tamil newsஅரசியல்வாதிகள் தனக்கிருக்கும் எல்லையை மீறிச் சென்றால், அவர்களுக்கு வாக்காளர்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். எந்த வாக்காளர்களையும் நாம் எளிதாக எடைபோடக்கூடாது. நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம், ஆட்சியில் இருப்போம் என்ற நிலைப்பாட்டில் இருக்கக் கூடாது. இது ஒருவகையான அகங்காரம். இது வளரும்பட்சத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.


latest tamil newsமஹா.,வில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது ஏதோ விபத்து அல்ல. தேசிய மனநிலையை மனதில் வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் மஹா., மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், சட்டசபை தேர்தலில் அவர்களின் மனநிலை மாறிவிட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜ., நன்கு செயல்பட்டாலும், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சியால் சிறப்பாக வெல்ல முடியவில்லை. மஹா., மக்கள்கூட ஆட்சி மாற்றத்துக்காகவே வாக்களித்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூலை-202018:12:32 IST Report Abuse
madhavan rajan இதை புரிந்து கொள்ளவே இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது இவருக்கு. சபாஷ்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஜூலை-202005:11:43 IST Report Abuse
skv srinivasankrishnaveni சாமானியனுக்கு அன்றாடத்தேவைக்கு பணம் வேண்டும் ஆனால் 98% அரசியல்வியாதிகளுக்கு எவ்ளோப்பணம் வந்தாலும் போராதுங்களே காரணம் சொல்லனுமா சொன்னால் கேவலமா இருக்கும்
Rate this:
Cancel
11-ஜூலை-202023:08:53 IST Report Abuse
kulandhai Kannan கொல்லைப்புற வழியாக மராட்டியத்தில் ஆட்சியை பிடித்துவிட்டு, மக்களை சாட்சிக்கு அழைக்கிறார் இந்த மராட்டிய ஊழல் விஞ்ஞானி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X