எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி பேரம் பேசும் பா.ஜ.,: ராஜஸ்தான் முதல்வர் புகார்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
MLA, BJP, Bharatiya Janata Party, Rajasthan government, Ashok Gehlot, congress, எம்.எல்.ஏ.,பா.ஜ, காங்கிரஸ், அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க, பா.ஜ., அரசியல் விளையாட்டை துவக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முதல்வர் அசோக் கெலாட், தங்கள் கட்சி எம். எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி வரை பேரம் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது : கொரோனா பிரச்னை உள்ள காலத்தில் மாநில அரசு மக்களுக்காக பணியாற்றி வருகிறது. ஆனால், பா.ஜ., தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரையும் இணைந்து பணியாற்றி வருகிறது.ஆனால், பா.ஜ., அனைத்து எல்லையை மீறியுள்ளது. அரசை கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி எடுத்து வருகிறது.


latest tamil news


ராஜஸ்தானில் ஆட்சியமைக்க, எம்.எல்.ஏ.,க்கள் அணி மாற விலை பேசப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சில எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி வரை பணம் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சலுகைகள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 7 எம்.எல்.ஏ.,க்களை வாங்கிய பா.ஜ., தற்போது, அதனை இங்கேயும் செய்ய நினைக்கின்றனர். ஆனால், அவர்களை நிறுத்தி, உரிய பாடம் கற்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
12-ஜூலை-202006:08:49 IST Report Abuse
Raja கான்கிராஸ் ஊழல் செய்து கொள்ளை அடிச்சு வச்சிருக்கறதுல இருந்து அந்த எம்எல்ஏக்களுக்கு இருவது கோடி கொடுத்திடுங்க. கட்சி மாறவே மாட்டாங்க. எப்படியும் அடுத்த தோ்தல்ல கட்சி காலியாகிடும். இதை விட்டால் சம்பாதிக்க வேற வழியில்லை.
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
11-ஜூலை-202023:02:35 IST Report Abuse
Rajan சச்சின் பைலட் CM ஆவரதுக்கு அடித்தளம்
Rate this:
Cancel
11-ஜூலை-202022:47:12 IST Report Abuse
நக்கல் சொல்லறதுதான் சொல்லறீங்க சும்மா 100 கோடி என்று சொன்னால் MLAகளாவது சந்தோஷப்படுவாங்க... காங்கிரஸில் இருந்து எப்படா ஓடலாம் என்று பலர் காத்திருக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X