பொது செய்தி

இந்தியா

ஆசிய பணக்காரர்களில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Mukesh Ambani, Billionaire, Asia's Rich List, Rich, Asia, World, Warren Buffett, india, RIL, ambani, முகேஷ் அம்பானி, கோடீஸ்வரர், ஆசியா, உலகம், வாரன்பபெட்

புதுடில்லி: இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்த முகேஷ் அம்பானி, மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக அளவில் 8வது இடம் பிடித்தார்.

இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நேரத்தில் தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17 சதவீத பங்குகளை விற்றார். இதனை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின.


latest tamil newsஇதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது. பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானியின் சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 68.3 பில்லியன் டாலர் ஆனது. இது இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனால், இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார்.

வெறும் 58 நாட்களில் கடன் இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியது. உலகின் தலை சிறந்த முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி.


latest tamil newsபுளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரகள் பட்டியலின்படி, அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்திலும், 67.8 பில்லியன் டாலருடன் வாரன் பபெட் 9வது இடத்திலும் உள்ளனர். வாரன் பபெட், கடந்த மாதம் 2.9 பில்லியன் டாலரை அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளதால் அவர் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அம்பானி, தற்போது ஆசிய பணக்காரர்களில் முதலிடத்திலும், உலகளவில் 8வது இடத்திலும் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஜூலை-202013:48:40 IST Report Abuse
Sampath Kumar நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-202002:36:23 IST Report Abuse
தல புராணம் இப்பவாவது ஒரு ரெண்டு நாளைக்கி பெட்ரோல் விலை ஏறாதுன்னு நம்பலாமா ?
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-202021:42:12 IST Report Abuse
Tamilan கோடானு கோடி மக்களை முட்டாளாக்கிவிட்டு , அரசின் துணையுடன் காலம் காலமாக மக்களிடம் கொள்ளையடித்து முடிசூடா மன்னர்களாக வலம் வருகிறார்கள் . இந்த அளவுக்கு உலகம் கெட்டுக்கிடக்கிறது . அதில் இந்தியாவும் சேர்ந்துவிட்டது . இவர்களிடம் பறிகொடுக்க, நாட்டுக்காகவும் தங்களுக்காகவும் , இந்தியர்கள் அனைவரும் தங்களை அர்பணித்துக்கொள்ள வேண்டும் என்று அரசியல் சட்ட அரசுகள் சட்டம் போடாத குறையாகிவிட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X