அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் கொரோனா: கமலுக்கு கவலை

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
CoronaVirus, Villages, Kamalhaasan, MNM, கொரோனா_பரவல், கவலை, கமல்ஹாசன், மக்கள் நீதி மையம், மக்கள் நீதி மய்யம், மநீம, மநீமை, கமல்

சென்னை: கிராமங்களில் கொரோனா பரவல் கவலையளிக்கிறது எனவும் வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும் எனவும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சமீபமாக 4 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு பதிவாகி வருவதால், மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது. கொரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக அனைத்து மாவட்டத்திலும் பாதிப்பு இருந்து வருகிறது. கிராமங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
12-ஜூலை-202008:50:31 IST Report Abuse
Viswam கட்டைவண்டி கட்டைவண்டி காப்பாத்த வந்தவண்டி சினிமாவுக்கு மட்டும்தென்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜூலை-202008:09:24 IST Report Abuse
Bhaskaran வீடு வீடாக வந்துசென்னையில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்கின்றனர் இதைபோல் கிராமங்களிலும் செய்தால் கொரோன கண்டிப்பாக கட்டுக்குள் வரும்
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
12-ஜூலை-202006:05:28 IST Report Abuse
Raja அண்ணாத்தே. நீங்க ரொம்ப கவலைப்பட்டு உடம்பை கெடுத்துகிடாதீங்க. நீங்க மக்கள் மேல அக்கறைல எவ்வளவு உதவி பண்ணினீங்கன்னு தெரியும். சுடலை மாதிரி தினசரி அறிக்கை விட்டுகிட்டு இருந்தீங்க. கோடிகள்ல வாங்கற நீங்க சட்டை பாக்கெட்ல இருந்து ஒரு பைசா கொடுக்கல. அரசியலை பத்தி கவலைப்படாம சினிமால டிவில சம்பாதிக்கற வழிய மட்டும் பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X