நிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
நிரந்தர தலைமை,தவிக்கும் காங்., ராகுலை இழுக்க பிரயத்தனம்

லோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் நிரந்தர தலைமையின்றி தவித்து வருகிறது. தற்காலிக தலைவராக சோனியா நியமிக்கப்பட்டு, ஒரு ஆண்டு முடிவு பெற உள்ளது. புதிய தலைவராக, ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்பதில், அவர் தயக்கம் காட்டி வருகிறார்.காங்கிரஸ் தலைவராக, 1998ம் ஆண்டு மார்ச் முதல், 2017ம் ஆண்டு வரை, சோனியா இருந்தார். 2017 டிசம்பரில், காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்றார். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின், காங்கிரசால் எழுந்து கொள்ள முடியவில்லை.ராகுல் தலைமை பொறுப்பேற்ற பின், 2018 இறுதியில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
பகிரங்க விமர்சனம்இதில், சத்தீஸ்கரில் பெரும்பான்மை பலத்துடன், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மற்ற இரண்டு மாநிலங்களிலும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சுயேச்சைகள் ஆதரவுடன், காங்கிரஸ்ஆட்சி அமைத்தது. இது, காங்கிரசுக்கு புத்துயிராக கருதப்பட்டது. ராகுல் தலைமைக்கு கிடைத்த வெற்றியாக, காங்கிரஸ் கட்சியினர் பெருமிதம் அடைந்தனர். ஆனால், அடுத்த ஐந்து மாதத்தில் நடந்த லோக்சபா தேர்தல், காங்கிரசுக்கு பேரிடியாக அமைந்தது.பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 352 இடங்களில் வென்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ், 52 இடங்களில் மட்டுமே வென்றது. அதிலும், காங்கிரசின் கோட்டை என கருதப்பட்ட அமேதி தொகுதியில், ராகுல் தோல்வியடைந்தார். லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வியால், ராகுல் தலைமை மீது, கட்சியினருக்கு அவநம்பிக்கை அதிகரித்தது. கட்சியில் சிலர், ராகுல் தலைமையை பகிரங்கமாக விமர்சித்தனர்.காங்., வாரிசு அரசியலை கைவிட வேண்டும் என, பல தரப்பினரும் கூறினர். இதனால், வெறுத்துப் போன ராகுல், தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார். கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தும், ராகுல் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 10ல் கூடி, சோனியாவை தற்காலிக தலைவராக தேர்வு செய்தது. காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என, அறிவிக்கப்பட்டது.ஆனால், சோனியா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில், கட்சிக்கு இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.


எதிர்ப்புஇந்நிலையில், காங்கிரஸ் தலைவராக, ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.சோனியாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், அவராலும் தீவிர பணிகளில் ஈடுபட முடியவில்லை. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியின் பொதுச் செயலராக, பிரியங்கா நியமிக்கப்பட்டார். எனினும் அவர், உத்தரபிரதேச அரசியலில் மட்டுமே தீவிரம் காட்டி வருகிறார்.பிரியங்காவை தலைவராக நியமிக்க வேண்டும் என, கட்சியில் சிலர் கூறி வருகின்றனர். ராகுல் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க ஆதரவு அதிகரித்தாலும், எதிர்ப்பும் கிளப்பியுள்ளது.தலைவர் பதவியை மீண்டும் ஏற்பது பற்றி, ராகுல் மவுனம் காத்து வருகிறார்.

மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் வேலையை மட்டுமே, அவர் மேற்கொண்டு வருகிறார். கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் முடங்கிய அரசியல் நடவடிக்கைகள், இப்போது தான் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. வரும் அக்டோபரில், பீஹார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி போட்டியிடுவது உறுதியாகி விட்டது.ஆனால், கடந்த தேர்தலில், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையில், காங்கிரஸ் இடம் பெற்றிருந்த மஹா கூட்டணி, இன்னும், 'செல்ப்' எடுக்காத நிலையிலேயே உள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பல மாநிலங்களிலும் இதே நிலைமை தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்., மூத்த தலைவர்கள் கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது.சீன விவகாரம், கொரோனா நெருக்கடி, பொருளாதார பிரச்னை ஆகியவை பற்றி விவாதிக்கவே இந்த கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இதில், காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதை தான், தலைவர்கள் பெரிதும் வலியுறுத்தினர்.'மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை கிளப்ப, நிரந்தர தலைவர் வேண்டும்; அதற்கு, ராகுல் தான் பொருத்தமானவர்' என, தலைவர்கள் பலரும் வலியுறுத்தியதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தக் கூட்டத்தில், சிதம்பரம், அம்ரீந்தர் சிங், அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உட்பட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில், ராகுலும், பிரியங்காவும் பங்கேற்றனர்.


மீண்டும் பொறுப்புமேலும், 'கொரோனா பரவலால், கட்சியின் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட முடியாது. 'அதனால், 'ஆன்லைன்' வழியாக கூட்டத்தைக் கூட்டி, ராகுலை தலைவராக நியமிக்க ஒப்புதல் பெறப்பட வேண்டும்' என, தலைவர்கள் சிலர் தெரிவித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.இது பற்றி கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், 'ராகுல் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்பது, கட்சியினர் எண்ணம், விருப்பம்' என்றார்.ஆனால், இது பற்றி ராகுல் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 'மோடி அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பது தான் என் வேலை; அந்த பணியை நான் செய்கிறேன். மற்ற பணிகளை நீங்கள் செய்யுங்கள்' என, கூட்டத்தில் ராகுல் கூறியதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. சோனியாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, ராகுல், தலைவர் பொறுப்பை, மீண்டும் ஏற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பி.பானுமதிபத்திரிகையாளர்
சசி தரூர் எதிர்ப்பு?காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பதற்கு, கட்சியின் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதை முதலில் பகிரங்கமாக தெரியப்படுத்தியவர், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'காங்கிரசுக்கு, வேகமாக, திறமையாக செயல்படக் கூடிய தலைவர் உடனடியாக தேவை. 100 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட ஒரு கட்சி, நிரந்தர தலைவர் இல்லாமல் செயல்படுவது நல்லதல்ல. அதனால், கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அவர், ஒரு குடும்பத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதன் பின், சசி தரூர் கூறிய கருத்துக்கு, கட்சியிலேயே சிலர் மறைமுக ஆதரவு தெரிவித்தனர்,கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, சந்தீப் தீட்சித், மனீஷ் திவாரி ஆகியோரும், 'கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, தலைவர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்' என, தெரிவித்தனர். சந்திப் தீட்சித் கூறுகையில், 'ராகுலுக்கு நெருக்கமானவர்கள் தான், தலைவர் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கின்றனர்' என்றார்.மனீஷ் திவாரி கூறுகையில், 'கட்சியின் தலைவர் பதவிக்கு, சோனியா தான் பொருத்தமானவர். 1998 - 99களில் அடைந்த தோல்விகளில் இருந்த கட்சியை மீட்டவர் சோனியா. இப்போதும், கட்சியை மீட்க அவரால் மட்டுமே முடியும்' என்றார். 'வேறு எதுவும் தெரியாது'வாரிசு அரசியலை விட்டால், காங்கிரசுக்கு வேறு எதுவும் தெரியாது என, பா.ஜ., கூறியது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:வாரிசு அரசியல் இல்லையென்றால், காங்கிரசுக்கு வேறு எதுவும் தெரியாது. சோனியா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தவிர யாராலும், காங்கிரஸ் தலைவராக முடியாது. ராகுல் தான் தலைவராக வேண்டும் என, கட்சியினர் விரும்புவதாக நாடகம் ஆடி, அவரை தலைவராக்குவர்; அதுவரை, சோனியாவே தலைவராக இருப்பார். சோனியா குடும்பத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், கட்சியில் ஓரங்கட்டப்படுவர். அதனால் தான், ஜோதிராதித்ய சிந்தியா உட்பட மூத்த தலைவர்கள் பலரும், காங்கிரசிலிருந்து விலகினர்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகி சுடலை மன்றம் அதான் நம்ம துப்பறியும் துண்டு சீட்டு சுடலை இருக்காரே அவரை விட மிக சிறந்த தலைவர் இவ்வுலகில் உண்டோ? .
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூலை-202018:10:48 IST Report Abuse
madhavan rajan தொண்டர்களே இல்லாத கட்சிக்கு தலைமை ஒரு கேட்டா? நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் தங்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்வதில் தங்கள் வாரிசுகளுக்கு பதவி பெறுவதிலும்தான் குறியாக இருக்கிறார்கள். தொண்டர்களை சேர்ப்பதுமில்லை. இருக்கும் தொண்டர்களின் நலன்களை யோசிப்பதும் இல்லை. இந்த காட்சியெல்லாம் அடுத்து தேர்தலில் சிங்கிள் டிஜிட்தான். இப்போதே மாநிலக் கட்சிகளின் தயவில்தான் நாற்பதை தாண்டுகிறது.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
12-ஜூலை-202015:51:37 IST Report Abuse
Nagarajan D யாரு தலைமை பதவியில் இருந்தாலும் என்ன? தலைமையின் தலையில் ஒன்றும் இல்லை என்றால் என்ன செய்ய முடியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X