சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது!

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
CBI, investigation, probe, Sathankulam case, thoothukudi case, tuticorin, father-son custodial death, சாத்தான்குளம் சம்பவம்,சி.பி.ஐ., அதிரடி துவங்கியது!

துாத்துக்குடி; சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, ஜெயராஜ் வீட்டில், அவரது குடும்பத்தினரிடம், ஏழு மணி நேரம்,அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து, ஜெயராஜ், பெனிக்ஸ், முதலில் அனுமதிக்கப்பட்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணைநடத்தினர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள,10 போலீசாரையும், காவலில் எடுத்துவிசாரிக்க, நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், 6௦; அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை, ஜூன், 19 ல், விசாரணைக்கு அழைத்துச் சென்று, சாத்தான்குளம் போலீசார் தாக்கினர்.கோவில்பட்டி சிறையில் இருவரும் இறந்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.'சஸ்பெண்ட்' செய்யப் பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்து ராஜ், வெயில்முத்து, சாமத்துரை, செல்லத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


சி.பி.ஐ.க்கு மாற்றம்கைதான சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் வேண்டுகோள்படி வழக்கு விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் டில்லியில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த, சி.பி.ஐ., விசாரணை குழுவினர், மதியம் துாத்துக்குடி கிளம்பி சென்றனர்.அன்று மாலை, துாத்துக்குடி, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு, சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரன்குமார், எஸ்.ஐ.,க்கள் சுஷில்குமார், சச்சின், போலீசார் பவன்குமார் திரிபாதி, சைலேந்திரகுமார், அஜய்குமார் ஆகியோர் வந்தனர். சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., சங்கர், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.வழக்கு ஆவணங்களை பெற்ற, சி.பி.ஐ., குழுவினர், இரவு திருநெல்வேலி, வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கினர்.

நேற்று காலை, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., அனில்குமார், வண்ணார்பேட்டை வந்து, வழக்கில் தொடர்புடைய மேலும் சில ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.இதையடுத்து, சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில் ஏழு பேர், நேற்று பகல், 11:50 மணிக்கு துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சென்றனர்.ஜெயராஜ் வீட்டில், அவரது மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதிகாரிகளிடம், செல்வராணி அழுதபடியே நடந்த சம்பவங்களை விவரித்தார். விசாரணை குழுவினருக்கு, திசையன்விளையில் இருந்து, மதிய உணவு வாங்கி வரப்பட்டது; அங்கேயே சாப்பிட்டனர். பிற்பகல், 3:30 மணி வரை விசாரணை தொடர்ந்தது.பின், குழுவில் இருந்து நான்கு பேர் மட்டும், மாலை, 4:00 மணிக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மீதம் இருந்தவர்கள், ஜெயராஜ் குடும்பத்தினரிடம், விசாரணையை தொடர்ந்தனர்.சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பெனிக்சுக்கு ஜூன், 20ல் சிகிச்சையளித்து, சிறைக்கு அனுப்ப சான்றிதழ் வழங்கிய, டாக்டர் வினிலா அங்கு இல்லை.வினிலா தற்போது விடுப்பில் உள்ளதால், உறைவிட மருத்துவர் ஆத்திகுமார், ஊழியர்களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர்.உதவிய உறவினர்இதற்கிடையில், ஜெயராஜ் வீட்டில், மாலை, 6:40 மணி வரை விசாரணை நடந்தது. விசாரணை முழுவதையும் 'வீடியோ'க்களாக பதிவு செய்தனர். சம்பவத்தன்று ஜெயராஜ், பெனிக்சை சந்திக்க சென்ற உறவினர்களிடமும், சம்பவம் குறித்து விபரமாக கேட்டனர். ஜெயராஜின் உறவினரான ஜோசப், ஹிந்தி தெரிந்தவர். விசாரணையின் போது, குடும்பத்தினர் சொல்வதை, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, அவர் ஹிந்தியில் விளக்கினார்.வழக்கில் கைதாகி உள்ள, ௧௦ போலீசாரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அடுத்த வாரம் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யஉள்ளனர்.


கோவில்பட்டி சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணைவழக்கு தொடர்பாக, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், கோவில்பட்டி கிளை சிறையில் பலமுறை விசாரணை மேற்கொண்டுள்ளார். நேற்று, டைப் மெஷின்களுடன் சென்று, விசாரணை நடத்தினார்.கிளை சிறை ஜெயிலர், வார்டன்கள், சம்பவத்தன்று இருந்த கைதிகளிடம் தனித்தனியே வாக்குமூலங்களை பதிவு செய்தார். விசாரணை, மூன்றரை மணிநேரம் நடந்தது. கோவில்பட்டி கிளை சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதும், நேற்றைய விசாரணையில் பதிவு செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
13-ஜூலை-202014:48:57 IST Report Abuse
மோகன் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா குற்றவாளிகளுக்கு பின்னால் பெரிய கைகள் இருக்குமேயானால் எல்லாம் அமுங்கி போகும் பொள்ளாச்சி கேஸை போல. இவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையே குறைந்து விட்டது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜூலை-202008:33:54 IST Report Abuse
Sampath Kumar என்ன பெரிய அதிரடி கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ? ஒருத்தர் ஹார்ட் அட்டாக்கில் செத்திட்டாரு இன்னோருத்தர் காச்சலில் போய்ட்டாரு அம்புட்டு தானே விஷயம் ?/ மூத்தவர் சொன்னபிறகு விசாரணை எதுக்கு
Rate this:
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
12-ஜூலை-202020:18:53 IST Report Abuse
Shekar Raghavan சிறைக்கு அனுப்ப சான்றிதழ் வழங்கிய, டாக்டர் வினிலா அங்கு இல்லை.வினிலா தற்போது விடுப்பில் உள்ளதால், கிடப்பில் போடவா?வீடு தேடி விசாரிக்கவும். வீடாதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X