பொது செய்தி

இந்தியா

சீன படைகள் விலகியதா? சாட்டிலைட் படங்கள் சாட்சி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சீன படைகள் விலகியதா? சாட்டிலைட் படங்கள் சாட்சி

புதுடில்லி : லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சீனப் படையின் ஒரு பகுதி மட்டுமே விலக்கி கொள்ளப்பட்டுள்ளது, புதிதாக வெளியாகி உள்ள, 'சாட்டிலைட்' படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு படைகளும் விலக்கி கொள்வது என, முடிவு செய்யப்பட்டது. பல கட்ட பேச்சுகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளும் நடவடிக்கை துவங்கியது.இதையடுத்து, பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சீனப் படைகள் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக வெளியிடப்பட்டுள்ள, சாட்டிலைட் படங்களில், சீனப் படையின் ஒரு பகுதி மட்டுமே விலக்கி கொள்ளப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இம்மாதம், 10ம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில், சீனா அமைத்திருந்த தற்காலிக கட்டுமானப் பணிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முன்பு சீன படைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தற்போது அது வெகுவாக குறைந்துள்ளது.அதே நேரத்தில், ஏரியில், சீனா ராணுவத்தைச் சேர்ந்த, படகுகள் இருப்பது தெரியவந்தது. அது நிறுத்தி வைக்கப்படும் இடம் மட்டும் மாறியு உள்ளது. ஏரியை ஒட்டி முகாமிட்டிருந்த வீரர்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளனர். சற்று தொலைவில் இருந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்படவில்லை என்பது, படங்களில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
12-ஜூலை-202010:41:21 IST Report Abuse
bairava இது ஸ்டேலைட் படம் அல்ல சீன படைகள் காலி செய்தது உண்மை ஏன் என்றால் அந்த பள்ளத்தாக்கில் மழை பெய்து வெள்ளம் வந்தது. ஆகவே சீன படை திரும்பி சென்றது
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202009:21:18 IST Report Abuse
Janarthanan ஏ உன்னும் இந்த satellite இமேஜ் டப்பா போட்டு காண்பிப்பதை விட வில்லை?? கிளம்புங்க சீனா கைக்கூலி கூட்டமே உங்க பாஸ் அல்ரெடி பின் வாங்கி விட்டான்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜூலை-202008:21:50 IST Report Abuse
blocked user பனி உறையும் நிலையில் ஆற்றில் வெள்ளம். சீனர்கள் ஜலசமாதியடைய விரும்பமாட்டார்கள். பயந்ததாக காட்டிக்கொள்ளக்கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தார்கள். இப்பொழுது ஒரு வெள்ளம் என்ற சாக்கு கிடைத்தது ஓடி விட்டார்கள். இந்தத்தாக்குதலில் சீனாவுக்கு சேதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஓடிவிட்டாரகள் என்றே உறுதிசெய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X