சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அமைச்சருக்கு நல்லா தெரியும்!'

Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அமைச்சருக்கு நல்லா தெரியும்!'


அமைச்சருக்கு நல்லா தெரியும்!'



மதுரை காமராஜ் பல்கலையில் அமைக்கப்பட்ட, 'கோவிட் கேர்' மையத்தை, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய் ஆகியோர், சமீபத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது, நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் உதயகுமார், 'மதுரையின் அடையாளங்களாக உள்ள மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா, காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் போன்று, பிரதமர் மோடியால் கிடைத்த, 'எய்ம்ஸ்' மருந்துவமனையும், பிரசித்தம் பெறும்' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர், 'தமிழக அமைச்சர்கள், முன்னாள் முதல்வர், ஜெ., புகழை மறந்து, மோடியை புகழுறாங்களே...' என்றார்.அருகிலிருந்தவர், 'இன்னைக்கு ஆட்சி நடத்த, யார் தயவு தேவைன்னு, அமைச்சருக்கு தெரியாதா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


இது, பிரஷாந்த் கிஷோரின் மனு!



ஈரோடு கலெக்டர், கதிரவனின் முகாம் அலுவலகத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் முத்துசாமி, வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலர் நல்லசிவம் ஆகியோர், 'கொரோனா' நடவடிக்கை குறித்து, 32 கேள்விகள் அடங்கிய மனுவை வழங்கினர். மனு, ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. இதை பார்த்த நிருபர்கள் சிலர், 'எதற்கெடுத்தாலும், தமிழ், தமிழர், பிற மொழி எதிர்ப்பு பேசும், தி.மு.க.,வினர், ஆங்கிலத்தில் மனு கொடுத்திருக்காங்க... கலெக்டரும், மாவட்ட செயலர்களும் தமிழர்கள் தானே...' என்றனர்.இளம் நிருபர் ஒருவர், 'ஊருக்கு மட்டும் தான் உபதேசம் செய்வாங்க... இந்த மனு, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தயாரிச்சுக் கொடுத்ததா இருக்கும்...' என்றதும், சுற்றியிருந்த தி.மு.க.,வினர், அசடு வழிந்தனர்.


அது, வேலை செய்யுமா?'



கொரோனா' தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 24ம் தேதி முதல், தமிழகத்தில், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.அதற்கு மாற்று ஏற்பாடாக, மொபைல் வழி குறைதீர்வு கூட்டத்திற்கு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக, நான்கு மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டன.சமீபத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், முதல் மொபைல் வழி குறைதீர்வு கூட்டம் நடந்தது. 120 பேர், கோரிக்கை விடுத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'மக்கள், நேர்ல பார்த்து சொன்னாலே, அதிகாரிகள் அலைய விடுவாங்க... இதுல, மொபைல்போன்ல, பிரச்னையை சொல்லி, அவங்க அதை நிவர்த்தி செய்திடுவாங்களா...' என, கேள்வி எழுப்பினார்.அருகிலிருந்தவர், 'அந்த மொபைல் போன் வேலை செய்யுமா... இல்லை, அரசு அதிகாரிகள் போல, சும்மாவே இருக்குமா...' என்றதும், அதிகாரிகள் இறுக்கமான முகத்துடன், இடத்தை காலி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூலை-202006:00:35 IST Report Abuse
D.Ambujavalli அந்த மனுவைப் படிக்கக்கூட அவர்களால் முடிந்திருக்காது அவர்கள் தமிழை ‘வளர்க்கும்’ அழகு இதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X