பார்லி., தொடர்: வெங்கையா ஆலோசனை

Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பார்லி., தொடர்: வெங்கையா ஆலோசனை


புதுடில்லி : பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி,இறுதி செய்யப்படவில்லை. ஆனால், பார்லிமென்ட் கூட்டத்தின் இரு அமர்வுகளுக்கு இடையே, ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.


latest tamil news




இதனால், செப்., 22க்கு முன், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளது. பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடரை, கொரானா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதுகாப்பாக நடத்துவது குறித்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், இரு அவைகளின் அதிகாரிகளுடன்,நேற்று ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:பார்லிமென்டின் இரு அவைகளும், ஒரே நேரத்தில் செயல்படுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.

இவற்றில், எம்.பி.,க்கள், நேரடியாக பங்கேற்க வாய்ப்புள்ளதால், அவர்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கான, நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பார்லி.,யின் நுாலக கட்டடத்தின் மத்திய அறைகள், ஆடிட்டோரியம் மற்றும் இரு அவைகளின் லாபி மற்றும் கேலரிகளில், எம்.பி.,க்களுக்கு எவ்வாறு இடம் ஒதுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
12-ஜூலை-202006:17:24 IST Report Abuse
Balasubramanian எதிர் கட்சிகளுக்கு ஒருமணிநேரம், அவர்கள் கூப்பாடு போட்டு விட்டு வெளியே சென்றவுடன் ஆளுங்கட்சிக்கு ஒரு மணி என்று, மாறி மாறி அனுமதிக்கலாம் நடவடிக்கைகளை காணொளியில் தடையின்றி அனைவரும் பார்க்கலாம் அவை சுமுகமாக நடை பெறும். இடை இடையே எழுந்து யாரும் கூச்சல் குழப்பம் செய்ய மாட்டார்கள் சபாநாயகரும் அமைதியாக செயல் படலாம். எப்படி என் ஐடியா? சமூக விலகலை கடை பிடித்த மாதிரியும் ஆச்சு, எதிர் கட்சி வைரஸை கட்டுப் படுத்திய மாதிரியும் ஆச்சு 😊
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X