அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் மாஸ்க் அணிந்து ராணுவ மருத்துவ மையத்திற்கு சென்றார்.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியபோதும் பொதுவாக முகமூடி அணிவதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமையன்று வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கான வருகை தந்தார். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். ட்ரம்ப் முன்பு முகமூடி அணிய மறுத்து வந்த அவர் ,மற்ற அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டார்,


latest tamil news


வைரஸின் பரவலை தடுக்க மாஸ்க்குகளை பயன்படுத்துமாறு உயர் பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், அமெரிக்காவில் கொரோனாவால் வெள்ளிக்கிழமைக்குள் கிட்டத்தட்ட 1,34,000 அமெரிக்க உயிர்கள் பலியான நிலையில், ட்ரம்ப் மட்டுமே அணிய மறுத்தது தலைமைத்துவத்தின் குறைபாட்டைக் காட்டியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
12-ஜூலை-202013:34:08 IST Report Abuse
Visu Iyer மாஸ்க்கை அவர் கடைசி வரை தவிர்த்து இருக்க வேண்டும்.. அது தான் அவருக்கு பெருமையாக இருந்து இருக்கும்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-202009:08:19 IST Report Abuse
Rajagopal மாஸ்க்குக்கு பதிலாக வாயில் டேப்பை ஒட்டியிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஜூலை-202009:07:23 IST Report Abuse
skv srinivasankrishnaveni மாசுகபோட்டுண்டால் நமக்கு நல்லது அதுதெரிஞ்சும் தெரியாததுபோல் நாடகம் ஆடும் கேனக்கிருக்கண்களைப்பார்த்தால் பாவமாவும் இருக்கு கோவமும் வரது .காரணமேயில்லாது ஊரு சுற்றும் இளசுகளை பாக்கவே பரிதாபமாயிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X