பொது செய்தி

இந்தியா

'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் சீசனும் துவங்கியுள்ளதால், நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.latest tamil newsநாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, எட்டு லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில், டெங்கு வைரசின் சீசனும் துவங்கியுள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, மருத்துவஆராய்ச்சிகளுக்கு, நிதியுதவி செய்யும் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நச்சுயிரியல் நிபுணருமான ஷாஹித் ஜமீல் கூறியதாவது:கடந்த, 2016 - 2019 ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், இரண்டு லட்சம் பேர் வரை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தெரிகிறது. தென் மாநிலங்களில், ஆண்டு முழுதும், பலர், டெங்கு வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.
வட மாநிலங்களில், பருவமழை காலத்திலும், குளிர் காலத்திற்கு முன்பும், இந்த வைரஸ் தீவிரமடைகிறது. கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் தனித்தனி பரிசோதனைகள் செய்யவேண்டும் என்பதால், மருத்துவ துறையினருக்கு, இது பெரும் சவாலாக இருக்கும். எனினும், இந்தியாவில், டெங்கு காய்ச்சலுக்கு, சிறந்த முறையில் பரிசோதனைகள் நடத்தி, சிகிச்சை அளிப்பது ஆறுதல் அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கோல்கட்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக துணை வேந்தரும், நச்சுயிரியல் நிபுணருமான துருவ்ஜோதி சத்தோபாத்யாய், ''கொரோனா, டெங்கு என இரண்டு வைரசுகளும், காய்ச்சல்,தலைவலி, உடல் வலி என பொதுவான அறிகுறிகளை கொண்டுள்ளன.


latest tamil news''கொரோனா பரவலுக்கு மத்தியில், டெங்கு வைரஸ் சீசனும் துவங்கியுள்ளதால், நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது,'' என்றார்.


ஐ.எம்.எஸ்., வேண்டும்!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., வரிசையில், ஐ.எம்.எஸ்., எனப்படும், இந்திய மருத்துவ சேவையையும் உருவாக்கவேண்டும் என, மத்திய அரசிடம், இந்திய மருத்துவ சங்கம், கோரிக்கை வைத்துள்ளது. இந்த, ஐ.எம்.எஸ்., தேர்வை எழுத அடிப்படை தகுதியாக, எம்.பி.பி.எஸ்., படிப்பு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
12-ஜூலை-202019:35:32 IST Report Abuse
S. Narayanan வந்தால் வரட்டும் போனால் போகட்டும் போடா.
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
12-ஜூலை-202014:20:54 IST Report Abuse
ராம.ராசு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பங்கிற்கு எதையாவது சொல்லி மக்களை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளை ஊடகங்களும் பரபரப்பு செய்தியாக்கிவிடுகின்றன. நோய்களும், வைரஸ் கிருமிகள் பாதிப்புகள் காலம் காலமாக மனித குலம் சந்திந்தித்துக் கொண்டுதான் உள்ளது. நோய்களுக்கு தடுப்பூசி கொண்டு தடுத்துவிட்டதாகச் சொன்னாலும், புதிதாக நோய்கள் வந்துகொண்டுதான் உள்ளன. அதற்க்கு தடுப்பூசிகளும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லுபவர்களும் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொள்வது இல்லை. மற்ற விலங்குகளைப் போலவே மனித உடலுக்கும் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் இயல்பு உண்டு என்பதை மறந்து போகச் செய்துவிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்களும், ஆட்சியாளர்களும். அரசியல் சாசனம் பல அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்கி இருந்தாலும், மருத்துவச் சுதந்திரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறோம். மருத்துவம் என்றாலே அலோபதி என்றும், அது மட்டுமே நோய்க்கான தீர்வு என்று சொல்லி, தாங்கள் விரும்பிய சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவத்தை எடுத்துக் கொள்ளுவதை கூட தடுக்கும் இப்போதைய நிலையை என்னவென்று சொல்லுவது. கொரோனா சீனாவில் உருவானது என்று சொன்னாலும் அங்கு கூட அந்த நாட்டுப் பாரமரிய மருத்துவத்தையே இப்போது பின்பற்றுகிறார்கள் என்பது செய்தி. இவ்வளவுதான் நோய்கள் என்றும், அதற்க்கு இவைகள்தான் மருந்து என்று வரையறுத்துச் சொல்லுவது சித்தர்கள் உருவாக்கிய சித்த மருத்துவறம். அத்தனையும் அன்றாட உணவுகளோடு, எளிமையான, பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறை. அதற்காக மருத்துவ, ஆராய்ச்சிப் படிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு, அலோபதி ஆராய்ச்சிகளை மட்டுமே தூக்கிப்பிடிக்கப்படுகிறது. அலோபதிக்கு வேண்டுமானால் புது நோயாக இருக்கலாம். ஆனால் சித்தாவிற்கு... அனைத்தும் ஏற்கனவே கண்டறியப்பட்டு, மருத்துவத்தையும் சொல்லுகிறது. அலோபதி மருத்துவதும் சிறப்பானது எனபதை மறுக்க முடியாது. ஆனால் அது அவசர கால, விபத்துக்களுக்கானது என்றால் மிகையாகாது. உடலில் இயல்பாக வரும் தொற்றுக்களுக்கு, பாதிப்புக்களுக்கு சித்தாவும், ஆயுர்வேதமும், ஹோமியோபதியும் மிகச் சிறப்பான மருத்துவம் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வது இல்லை. உடையில், சாதியில், மதத்தில் கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு, இயற்க்கை உணவுதான் நல்லது, இளநீரி, பதநீர் போன்ற பொருட்கள் உடலுக்கு நல்லது என்று சொல்லிக்கொண்டு, அயல்நாட்டு மருத்துவத்திற்கு, குளிர் பானங்களுக்கு, அழகு சாதனப் பொருட்களுக்கு, கிட்டத்தட்ட அனைத்து மின் சாதனப் பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதற்க்கு அரசு என்பதைவிட, ஆள்பவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். இந்தியாவில் அந்தந்த பகுதியில் இருக்கின்ற உணவுப் பழக்கத்தை முறையாகப் பயன்படுத்தினாலே எந்த ஒரு வைரஸ் தொற்றையும், நோயையும் எளிமையாக எதிர்கொண்டு விடலாம். வைரஸை விட, நோயை விட அதுபற்றிய செய்திகளே மக்களை பயம்கொள்ளச் செய்கிறது. பரபரப்பிற்காக ஊடகங்கள் எதையும் சொல்லலாம். அதற்காகவே திருக்குறள் இப்படிச் சொல்லுகிறது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு":. அதுமட்டுமல்ல இன்னொன்றையும் சொல்லுகிறது "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.". அரசுக்கு வேண்டுகோளாக வைப்பது "மத"ச் சுதந்திரம் போல, "பேச்சு" சுதந்திரம் போல, தான் விரும்புகிற "மருத்துவ"ச் சுதந்திரத்தையும் கிடைப்பதற்க்கான நிலையை உருவாக்கித் தரவேண்டும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-202022:52:52 IST Report Abuse
தல புராணம்40 வயசுக்கு பிறகு ஆண்டு மருத்துவப் பரிசோதனை பண்ணிக்காமல் இருந்தாலே போதும், நோயே வராது.. தொற்று பரிசோதனைகளை பண்ணலைன்னா நோய் இல்லைன்னு அர்த்தம்.. இந்தியாவில் சாவுகள் பதிவு வெறும் 0.6% அதாவது 1000 சாவுகளில் 6 சாவுகள் தான் பதிவு செய்யப்படுகின்றன.. ஆக, சாவை மறைச்சிட்டா டெங்கு இல்லைன்னு அர்த்தம், கொரோனா இல்லைன்னு அர்த்தம், அட நாம தேவாமிர்தம் சாப்பிட்டு சாகாவரம் பெற்று விட்டோம்னு கூட அர்த்தம்.. தினசரி வாழ்வதற்கு செத்து பிழைக்கும் அவலம்.. செத்தலாவது நிம்மதி என்று இருக்கும் ஏழை ஜனம்.. நமக்கு முக்கியம் மேலே இருக்கும் 1% அவ்வளவு தான்.. அமிதாப்பச்சனுக்காக பிரார்த்தனை செய்வோம் வாங்க.....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-202008:19:50 IST Report Abuse
தல புராணம் நாம பாக்காத டெங்குவா ? டெங்குவை மருமக்காய்ச்சல் கணக்கிலேயும், கொரோனாவை டெங்கு காய்ச்சல் கணக்கிலேயும் எழுதிட்டா கொரோனாவை வென்ற நாயகன்னு தல மெடலு குத்திக்கலாம்.. டாக்டர் முதல்வரும் பெருமைப்பட்டுக்கலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X