கொரோனா தொற்றுடன் வாழ்வோம்!

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
'இவளுக்கு எப்பவும்இப்படி தான் கிறுக்குப் பிடிக்கும்; எது வேண்டாம் என நினைக்கிறோமோ, அது வேண்டும் என்பதைத் தலைப்பிடுவாள்' என, என் மீது பலருக்கும் எரிச்சல் கிளம்பலாம்; புன்னகை தான் என் பதில்!'கொரோனா' என்ற சொல்லுக்கு, நமக்கெல்லாம் இப்போதைக்கு அர்த்தம் தெரிவது, 'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் - சார்ஸ்' வகையிலான வைரஸ் என்பது தான்.சப்தநாடியும்
கொரோனா தொற்றுடன் வாழ்வோம்!

'இவளுக்கு எப்பவும்இப்படி தான் கிறுக்குப் பிடிக்கும்; எது வேண்டாம் என நினைக்கிறோமோ, அது வேண்டும் என்பதைத் தலைப்பிடுவாள்' என, என் மீது பலருக்கும் எரிச்சல் கிளம்பலாம்; புன்னகை தான் என் பதில்!'கொரோனா' என்ற சொல்லுக்கு, நமக்கெல்லாம் இப்போதைக்கு அர்த்தம் தெரிவது, 'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் - சார்ஸ்' வகையிலான வைரஸ் என்பது தான்.


சப்தநாடியும் ஒடுங்கியதுகொரோனா என்ற பெயரில், ஒரு தேவாலயம், சூரியனின் வான்வெளி, மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பீர் வகை, குல வகையில் மனிதர்களில் ஒரு பிரிவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் அமைந்துள்ள நகரம், ஸ்பெயின் கால்பந்து வீரர்...மேலும், சாக்லேட், சாப்ட்வேர் வகை, மொபைல்போன் அப்ளிகேஷன், செடிகளின் அமைப்பில் ஒரு தோற்றம், திரவங்களின் கடைசி சொட்டின்தாக்கம், ஆங்கில எழுத்தின் அச்சுறு என, பல வகை உள்ளது. மேலே சொன்ன இவ்வளவையும் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது... 'வெட்டி.காம்' என, நான் அமர்ந்திருந்த போது, கூகுளில் தேடியவை தான்! எப்படி, 'வெட்டி'யாக அமர்ந்தேன் என, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!வெட்டியாய் இப்படி அமர்ந்திருக்கும் வேளையில், என்னென்ன மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தது தெரியுமா...மார்ச், ௨௦. ஒரு நாள் முழு ஊரடங்கு. மொத்த இந்தியாவும், கட்டுண்ட பாம்பு போல், சப்தநாடியும் ஒடுங்கி உட்கார்ந்திருந்தது. ஆபீஸ் சென்று வந்த எனக்கு, ஆச்சரியம் ஏற்பட்டது. ஒரே ஒரு உத்தரவில், கட்டுப்பட்டு விட்டோமே... ஆனால், ஏதோ அபாயம் ஏற்படப் போகிறது என, மனம் சொல்லியது.அடுத்தடுத்த நாட் களில், எதுவும் புரியாமல்,ஆபீஸ் சென்று வந்தேன்.மார்ச், ௨௫ல், 'லாக் - டவுன்' அறிவித்த பின், முதல், ௧௦ நாட்கள், பயத்தில், பீதியில் சீனாவைத் திட்டினேன்; என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டில் வேலை செய்யப் பிடிக்காமல், பித்து பிடித்தவளாய் இருந்தேன்.பின், மெல்ல சுதாரித்தேன். ஓட ஓட விரட்டும் இந்த வைரஸ் எப்படிப்பட்டது எனப் படிக்கத் துவங்கினேன். முழு உடல் அமைப்பு இன்றி, மனித உடலில் ஒட்டும் வகையிலான வைரஸ் இது என்பது தெரிந்தது.


ரத்த நாள வெடிப்புநம் அருகில் இருப்பவர்களுக்கு, சாதாரண சளி, இருமல் ஏற்பட்டால், நமக்கும் தொற்றிக் கொள்ளும்; ஒரு வாரத்தில் சரியாகி விடும். இது, வழக்கமாக, இது வரை நாம் கண்டது.அந்த வகையிலிருந்து சற்று மாறுபட்டு, வேகமாகப் பெருகி, நுரையீரலையும் மிக வேகமாகப் பதம் பார்க்கிறது என்பது தான், இந்த கொரோனா வைரசின் விசேஷம். சில பேருக்கு, நரம்புகளை பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.நரம்புகளில் ரத்தத்தைஉறைய வைத்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது அல்லது ரத்த நாள வெடிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, வெறும் சளி, இருமல் எனக் கருதி, சாதாரணமாக இருந்து விடக் கூடாது என்பது புரிந்தது. தனி மனித இடைவெளி, முக கவசம் என்று, மத்திய அரசு அறிவுறுத்தத் துவங்கியதும், என் மனதில் வந்து சென்றதே, பெண்களின், 'அந்த மூன்று நாட்கள்' விவகாரம் தான்.


பசுஞ்சாணம் தெளிப்புஅந்த நாட்களில் பெண்களை வீட்டில் உள்ளோர் தொட மாட்டார்கள்; தனிமையில் வைப்பர். தலையணை முதல், சாப்பாட்டு தட்டு வரை எல்லாமே தனி.அவர்கள் வசிக்கும்இடத்தை, சாணி போட்டுத் துடைக்க வேண்டும். துடைப்பவர்களும், தலைக்கு குளிக்க வேண்டும். அப்படிப்பட்ட தனிமை தான், தற்போது நம் ஒவ்வொருக்கும் தேவை என்பது, 'கொரோனா' சொல்லிக் கொடுக்கிறது.மேலும், பல விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கிறது. காலையில் துாங்கி எழுந்ததும், சூரியனைப் பார்த்து, 'குட்மார்னிங்' சொல்லிவிட்டு, பல் துலக்கி, வாசலில் பசுஞ்சாணம் தெளித்துக் கோலம் போடுவது நடைமுறையாக இருந்தது.நுண் கிருமிகளை அழிக்கும் திறன், சாணத்திற்கு உண்டு; அதை வீட்டு வாசலில் தெளித்தால், எந்த நுண் கொம்பனும், நம்மிடம் வாலாட்ட முடியாது. சாணம் பூசிய தரை மீது கோலம் போடுவது, காக்கை உட்பட பல பட்சிகளுக்கு இரை கொடுப்பதற்காக; வீடு சுபிட்சமாக இருக்கிறது என்பதை மற்றவர்களிடம் தெரிவிப்பதற்காக!'இப்போது, நம் உடலையே கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டிய நிலை வந்துள்ளதே...' என யோசிக்கும்போதே, நம் முன்னோர், இதைத் தானே சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் எனத் தோன்றியது.


கல் உப்பு குளியல்அதிக சூடுமில்லாமல், அதிக குளிர்ச்சியும் இல்லாத தண்ணீரில், கல் உப்பு போட்டுக் குளிக்கும் பழக்கம் முன்னோரிடம் இருந்தது.முடிந்தால், எலுமிச்சை, இரண்டு கிள்ளு வேப்பிலை போடலாம். பெண்கள், கஸ்துாரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பர். இப்போது, மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு வா! நாம் பிறந்த மண்ணில் விளையும் பயிர்களையே உணவாக உண்பது, மற்றொரு பழக்கம். காலையில் பழைய சோறு கஞ்சியும், மதியத்திற்கு துாக்கு சாதமும், இரவு, 7:00 மணிக்குள்ளாக, சுடுசோறுமாக உண்டு, பகலில் கழனி வேலை கண்டு, மற்ற நேரங்களில் வீட்டு வேலைகளையும் உடல் சளைக்காமல் செய்து, வாழ்ந்தோம். சுகராவது; பீப்பியாவது! பெருங்காய டப்பா சேமிப்பு குறித்துச் சொல்லவே வேண்டாம். கணவருக்கு சொற்ப வருமானமாக இருந்தாலும், பெண்கள் அனைவரும், சமையலறையில், அஞ்சறைப் பெட்டி முதல், நார்த்தங்காய் ஜாடி அடி வரை, காசு பணத்தை சேமித்து வைத்ததை மறக்கவே முடியாது. அந்தக் காசை வைத்து, மகள்களுக்குக் கல்யாணம் கூட, முடித்து விடுவர். அந்த சேமிப்புப் பழக்கத்தை முற்றிலும் தொலைத்து, விதவிதமாய் உடையும், அலங்காரமும், தீனியுமாய் திரிகிறோம் இப்போது! ஒரு நாள் சம்பளம் இல்லையெனில், வயிற்றில் ஈரத் துணியைப் போட வேண்டிய நிலை!இதையெல்லாம் யோசிக்க யோசிக்க, நம் முன்னோர், எவ்வளவு புனிதமாக வாழ்ந்துள்ளனர் என எண்ணி, வியப்பு ஏற்பட்டது.பயன்படுத்தும் ஒவ்வொன்றுக்கும், நன்றி சொல்வது அவர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.நம்மைப் பெற்றெடுத்தவர்களுக்கு நன்றி, சூரியனுக்கு, 'குட்மார்னிங்' சொல்வது முதல், புழங்கும் தண்ணீர், உடை, உணவு, வீடு, மக்கள், நாள், நேரம் என ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்வதற்கென, தனி, சுலோகங்களே உண்டு என்பதை, வல்லுனர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


மீண்டு வருவோம்நாமோ, எல்லாவற்றையும், 'டேஷு'க்கு - கெட்ட வார்த்தை - கீழே போட்டு, அவற்றின் மீது அமர்ந்து, எகத்தாளம் செய்து கொண்டிருக்கிறோம்.சில பேர், இந்த கொரோனாவைக் கண்டும், அதனால் ஏற்படுத்தப்படும், 'தனிமை' வாழ்வைக் கண்டும் அஞ்சி, உயிரை மாய்த்துக் கொள்ள முற்படுகின்றனர்; சிலர், உயிரை விட்டும் விட்டனர்.எதற்கு இப்படிப்பட்ட எண்ணம்... 'நோய் வந்தால், சிகிச்சை எடுத்துக் கொள்வோம்; தனிமையில் இருப்போம்; கண்டிப்பாய் மீண்டு வருவோம்' என்ற எண்ணத்தை எப்படி கைவிட முடிகிறது...'கொரோனா பாசிட்டிவ்' வந்தால், நாம், 'பாசிட்டிவ்' ஆக இருந்து, அதை, 'நெகட்டிவ்' ஆக மாற்றலாமே!


அழகான பிறவிஇறைவன் கொடுத்த உயிர் இது. 'இங்கே பார்... உனக்கு மிக மிக அழகான பிறவியைக் கொடுத்திருக்கிறேன். அதை, மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள். ஒரு காரணத்திற்காக தான் உன்னைப் படைத்திருக்கிறேன். 'அது நிறைவேறியதும்உன்னை அழைத்துக் கொள்வேன். நீ முறையாக வாழவில்லை என்பதற்காக தான், ஒரு சின்ன சோதனை வைத்தேன். மீண்டு வா. நல்ல வாழ்க்கை கிடைக்கும்' என, கடவுள் சொல்கிறாரோ என்றே தோன்றுகிறது!எனவே, கொரோனாவுக்கு நன்றி சொல்லியபடி, அதனுடன் வாழ்ந்தால் தான், நோய் எதிர்ப்பு சக்தியுடன், நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எதிர்வரக் கூடிய இன்னல்களையும் சமாளிக்க முடியும்.இல்லையெனில், 'பழைய குருடி, கதவைத் திறடி' என, தீய பழக்கங்களுக்கு, மறுபடி ஆளாவோம்; நம் சந்ததியினருக்கு, கொரோனாவை விட அதிக வீரியம் வாய்ந்த தொற்றை விட்டுச் செல்வோம். தேவையா இது? தொடர்புக்கு:

பி. பானுமதி , பத்திரிகையாளர். இ - மெயில்: banumathi@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஜூலை-202004:17:17 IST Report Abuse
NicoleThomson அட அழகா எழுதியிருக்கீங்க ஆனா அந்த நகரத்தின் பெயரை என்னவென்று தேடுனீங்க மேம்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202008:18:22 IST Report Abuse
Matt P கூகுலில் தேடி பார்த்த பொது கரோனா பெயரில் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு நகரம் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202008:09:08 IST Report Abuse
Matt P அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் அமைந்துள்ள நகரம்,,,,கரோனா என்று எந்த நகரத்துக்கும் பெயர் இருப்பதாக தெரியவில்லை வட கரோலினா தென் கரோலினா என்று 2 மாநிலத்துக்கு பெயர் இருக்கிறது. கரோலினா என்று ஸ்பானிஷ் பேசும் கத்தோலிக்க லத்தீன் மக்களுக்கு பெயர் இருக்கிறது. கரோனா என்று மெக்ஸிகோவில் இருந்து வரும் பீர் க்கு அந்த பெயர் இருக்குறது. கரோலினா என்றால் ஸ்ட்ரோங் என்று பொருளாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X