பாரிசில் விரைவில் வருகிறது மிதக்கும் தியேட்டர்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பாரிஸ்: சமூக தொலைதூர படகுகளில் இருந்து மக்கள் பார்க்கக்கூடிய ஒரு மிதக்கும் திரைப்பட தியேட்டர் வரும் 18 ம் தேதி பாரிஸில் உள்ள சீன் நதிக்கு வருகிறது.



latest tamil news



பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரிஸ் பிளேஜஸ் என்ற நிகழ்ச்சிகொண்டாடப்படும். பாரிசில் உள்ள புகழ்பெற்ற சீன் ஆற்றின் நடுவே தற்காலிக கடற்கரை உருவாக்கப்பட்டு கொண்டாடப்படும். இந்தாண்டு பிளேஜஸ் நிகழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்ஒரு பகுதியாக சீன் ஆற்றின் நடுவில் மிதக்கும் தியேட்டர் ஒன்று வரும் 18 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு சுர் எல் யோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் தண்ணீரில்சினிமா என்பதாகும்.

மிதக்கும் தியேட்டரில் திரைப்படத்தை காண்பதற்காக 38 மின்சார படகுகள் தயாராக உள்ளன. சமூக இடைவெளி நடைமுறை பின்பற்றி ஒவ்வொரு படகிலும் இரண்டு முதல் 6 பேர்வரை அமர்ந்து திரைப்படத்தை ரசிக்கலாம்.


latest tamil news



கொரோனா தொற்று பற்றிய கொரோனா ஸ்டோரி என்ற குறும்படமும், இரண்டாவது படமாக நீச்சல் அணியை துவங்கும் ஆண்கள் குழுவை பற்றிய2018 ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான லு, கிராண்ட் பெயின் என்ற படமும் திரையிடப்படுகிறது. உள்ளூர் வாசிகளுக்கு வரும் செவ்வாய்கிழமை(13ம் தேதி ) முதல் 15ம் தேதி வரை டிக்கெட் வழங்கப்படுகிறது.

பிரான்சில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் 50 சதவீத அளவிற்கு மட்டுமே தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
12-ஜூலை-202019:32:19 IST Report Abuse
S. Narayanan நம்ம ஊர்ல தண்ணீர்ல மிதந்து கொண்டு தானே சினிமா பார்க்கிறான்.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
12-ஜூலை-202018:28:50 IST Report Abuse
KavikumarRam சுனாமி வந்துச்சுன்னா என்ன பண்ணுவாங்க?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜூலை-202018:13:12 IST Report Abuse
Lion Drsekar இங்குதான் தனி மனிதர்கள் அனைவருமே எப்போதுமே நடக்கும்போதும் மிதந்து கொண்டுதானே செல்கிறார்கள், பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X