சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பில்லை: அதிபர் டிரம்ப்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன் : ''அமெரிக்கா -- சீனா இடையிலான உறவு, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டுடன், இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பில்லை,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.latest tamil newsஇந்த ஆண்டு துவக்கத்தில், அமெரிக்கா -- சீனா இடையில் நடந்த சுமுக பேச்சை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட ஒப்பந்தமும், விரைவில் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலகம் முழுதும் பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 'இந்த விவகாரத்தை சீனா, சரிவர கையாளவில்லை' என, அமெரிக்கா குற்றம்சாட்டியது.இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று, உலகம் முழுதும் பரவாமல் சீனா தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.

ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. வூஹான் நகரில் இருந்து, சீனாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினர். அமெரிக்கா -- சீனா இடையிலான உறவு, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுடன் இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
டிரம்ப் நண்பருக்குதண்டனை ரத்து


கடந்த, 2016ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில், பொய்யான தகவல்களை கூறியதாக, அதிபர் டிரம்பின் நீண்ட கால நண்பரும், ஆலோசகருமான, ரோஜர் ஸ்டோனுக்கு, மூன்று ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நீண்டகால நண்பர், ரோஜர் ஸ்டோனின் தண்டனையை, நேற்று ரத்து செய்தார்.இது குறித்து, வெள்ளை மாளிகை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரோஜர் ஸ்டோன் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், பலரை போலவே அவர் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டார். அவர், இப்போது ஒரு சுதந்திர மனிதர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-202000:37:23 IST Report Abuse
தல புராணம் // டயப்பரை மாத்தாம எவ்வளவு நாள் இருப்பீங்க... //
Rate this:
Cancel
12-ஜூலை-202008:49:57 IST Report Abuse
சிங்க ராஜா உலக நாடுகள் யாவுமே, தங்களது அனைத்துவிதமான வர்த்தகத் தொடர்புகளையும், சீனாவிடமிருந்து விலக்கிக்கொள்வது நல்லது!
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-202006:44:05 IST Report Abuse
தல புராணம் ஜூலை 2, The Commerce Department said on Thursday the trade deficit increased 9.7% to $54.6 billion.(இது மே மாசத்துக்கு மட்டும் இம்புட்டு) Economists polled by Reuters had fore the trade gap would widen to $53 billion in May. சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 9.7% அதிகமாகியுள்ளது.. ஆனா இவன் சொல்றது இங்கே நம்ம தல மாதிரி.. பொய் என்ற போர்வையை வைத்து மூடி தலைகீழா சொல்றது.. சீன பொருட்களுக்கு தடைன்னு கூவல், ஆனால் 96 பில்லியன் டாலரை இறக்குமதி பண்ணும் முதலாளிகளுக்கு ஸலாம்..100% சீன திட்டங்களுக்கு சிறப்பு திறப்பு விழா..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜூலை-202009:07:32 IST Report Abuse
 Muruga Velஉங்கள் எதிர்பார்ப்பு என்ன ..என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ... டயப்பரை மாத்தாம எவ்வளவு நாள் இருப்பீங்க...
Rate this:
Saravanan - Chennai,இந்தியா
12-ஜூலை-202011:42:03 IST Report Abuse
Saravananpresent trade defictit is different from future economical MoU. Avoiding MoU, will reduce trade deficit....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X