கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறை விதிகளில் திருத்தம் ; அரசுக்கு ஐகோர்ட் யோசனை

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

சென்னை : கைதிகளுக்கு, 'பரோல்' கிடைக்க, குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்ற விதியில் திருத்தம் ஏற்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.



latest tamil news



சென்னையை சேர்ந்த, அங்கையற்கண்ணி தாக்கல் செய்த மனு:ஒரு வழக்கில், என் கணவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை, புழல் சிறையில், 16 மாதங்களுக்கு மேலாக உள்ளார். எங்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள், கல்லுாரியில் படிக்கின்றனர்.குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்கும், கஷ்டமாக உள்ளது. பணம் ஏற்பாடு செய்ய, என் கணவர் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும். அவருக்கு, ஒரு மாத விடுமுறை வழங்க, சிறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, ''சிறை விதிகளின்படி, சாதாரண விடுமுறை பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். அதனால், விடுமுறை வழங்க இயலாது,'' என்றார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, 16 மாதங்கள் சிறையில் உள்ளார். மொத்த சிறை தண்டனையே, மூன்று ஆண்டுகள் தான். அதனால், மகள்களின் படிப்பு செலவுக்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக, மனுதாரரின் கணவருக்கு, ஒரு மாத சாதாரண விடுமுறை வழங்க வேண்டும்.


latest tamil news



ஆகஸ்ட், 8ம் தேதி, சிறைக்கு அவர் திரும்ப வேண்டும். ஒவ்வொரு திங்கள் கிழமையும், கே.கே.நகர் போலீசில் ஆஜராக வேண்டும்.சிறை விதிகளில் திருத்தம் வர வேண்டும். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும், அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும், ஒரே மாதிரியான விதியை திணிக்க முடியாது. சாதாரண விடுமுறை பெற, இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் இருக்க வேண்டும் என்றால், கைதிகளின் உரிமையை பாதிக்கும்.

எனவே, இரண்டு முதல், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுபவர்களுக்கு, சாதாரண விடுமுறை பெற ஏதுவாக, சிறை விதிகளில் திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூலை-202017:16:06 IST Report Abuse
Endrum Indian கைதிகள் என்றால் குற்றம் அறிந்தவர்கள் அறிந்து செய்தவர்கள் அவர்களுக்கும் மனித உரிமையா? அவர்கள் இன்னொரு மனிதரின் உரிமையை பறித்ததினால்தானே கைதி என்று சிறையில்? குடும்ப மற்றும் படிப்பு செலவுக்கு அவர் வெளியில் வந்து ஒருவனை கொலை செய்தால் அவனுக்கு கிடைக்கும் பணத்தை அவன் மனைவியிடம் கொடுத்து விடுவான் என்று யாருக்கும் தெரியாதா? இவனை மதித்து பணம் கொடுக்குமொருவன் அவன் மனைவியை மதித்து பணம் கொடுக்கமாட்டானா- வெளியே கொண்டு வருவதற்கு என்ன சால்ஜாப்பு?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-ஜூலை-202016:12:14 IST Report Abuse
Rafi உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தும் சிறுபான்மை இஸ்லாமிய விசாரணை கைதிகள் விடுதலையை மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க முற்படுவதில்லை. இத்தனைக்கும் குற்றம் நிரூபித்தால் கிடைக்கும் தண்டனை காலத்தையும் தாண்டிய நிலையில் பலர் இருக்கின்றார்கள். மாற்று மதத்தவர்கள் தேச விரோத செயலுக்காக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஜாமீனும், தேர்தலில் நிற்கின்ற வாய்ப்பும் நம் மத சார்பற்ற தேசத்தில் நடக்கும் அலங்கோலங்கள்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூலை-202015:50:25 IST Report Abuse
Darmavan குற்றவாளி மற்றவரின் மனித உரிமையை பாதித்தவன்.அவனுக்கு மனித உரிமை மறுக்கப்பட வேண்டும்.நீதிகள் கைதி உரிமை பற்றி பேசுவது கேவலம்.குற்றங்கள் அதிகமாகும் அப்பாவிகள் கஷ்டப்படுவார்கள்.அரசு இந்த யோசனையை இராகரிக்க வேண்டும்.பரோலுக்கு கூறும் காரணம் ல்பமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X