அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., தலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (81)
Share
Advertisement
kushbu, rahul, congress, Khushbu Sundar, Sanjay Jha, TN Congress, cong leader, குஷ்பு, ராகுல், காங்கிரஸ்

சென்னை: 'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் அல்லது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நியமித்திருக்க வேண்டும்' என்ற கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு அளித்ததால் அவருக்கு எதிராக தமிழக இளைஞர் காங்கிரசார் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் 'ராகுல் மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்' என சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். ஆனால் மும்பையை சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய்ஜா 'ராகுலுக்கு பதிலாக சச்சின் பைலட் அல்லது பா.ஜ.விற்கு சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கியிருக்கலாம்' என 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.


latest tamil news



அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா தன் டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரவித்துள்ளார். தலைவர் பதவியில் நேரு குடும்ப வாரிசு தான் தொடர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம். உட்கட்சி விவகாரத்தை சமூக வலைதளங்களில் விமர்சிக்கக் கூடாது. குஷ்புவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து சமூக வலைதளங்களில் குஷ்புக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹசன் மவுலானாவுக்கு பதிலடி தரும் வகையில் குஷ்புவும் 'கிளிப்பிள்ளை போல சாவி கொடுத்து சிலர் பேச வைக்கப்படுகின்றனர்' என பதிவிட்டார். இதையடுத்து இரு தரப்பினர் இடையிலான மோதல் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
15-ஜூலை-202015:43:28 IST Report Abuse
Ravi காங்கிரஸ் இன்று முதிர்ச்சி இல்லாத ராகுலிடம் சிக்கி தவிக்கிறது , காங்கிரஸில் இருந்து குட்டை குழப்பி கொண்டு வெளியே வரமுடியாத சேத்தில் மாட்டிக்கொண்டு திருட்டு முழி முழிக்கிறாரார்கள் .
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,இந்தியா
15-ஜூலை-202009:09:52 IST Report Abuse
Aanandh , பா.ஜ. கவுல துண்டு போட்டு வச்சிருச்சே..... கூடிய சீக்கிரம் குடி பெயர்ந்துடும்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-ஜூலை-202008:10:48 IST Report Abuse
நிலா சசிகலா சிறையிலிருந்து வருமுன்னே சும்மா அதிருதில்ல..தமிழகம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X