பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிப்பு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஒரேநாளில் 929 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் 20 நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சராசரியாக 280 பேர் தினமும் பாதிக்கப்படுகின்றனர். மொத்த பாதிப்பு 5500ஐ கடந்துள்ளது. பலி சதம் அடித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இது மக்களை

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஒரேநாளில் 929 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.latest tamil newsமாவட்டத்தில் 20 நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சராசரியாக 280 பேர் தினமும் பாதிக்கப்படுகின்றனர். மொத்த பாதிப்பு 5500ஐ கடந்துள்ளது. பலி சதம் அடித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இது மக்களை கவலையில் ஆழ்த்தியது.முதல் மூன்று இடத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை காட்டிலும் டிஸ்சார்ஜ் விகிதம் இங்கு வெகு குறைவு. அங்கு மூன்றில் ஒரு பகுதியினர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து விட்டனர்.


latest tamil newsமதுரையில் மூன்றில் இரு பங்கு நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். அன்றாட பாதிப்பு 200, 300 கடக்கும் நிலையில், டிஸ்சார்ஜ் மட்டும் 40, 50 என இருந்தது.இந்நிலையில் முகாம், வீட்டுத்தனிமை, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த 553 பேர் நேற்று காலையில் டிஸ்சார்ஜ் ஆகினர். மாலையில் மேலும் 376 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2179 ஆக உயர்ந்துள்ளது. இது மதுரை மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மதுரையில் இனி தினமும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். கொரோனாவில் இருந்து 98.5 சதவீதம் பேர் மீண்டு விடுகின்றனர். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
12-ஜூலை-202008:07:33 IST Report Abuse
svs தமிழ் நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை குறையாமல் இருந்தால் மீண்டு வரலாம் ....சென்னையில் தான் பிரச்சனை , சேட்டன்கள் மாநிலம் காரோண இல்லை என்று சொன்ன கேரளம் இப்பொது எண்ணிக்கை உயர்வு ...பெங்களூரு இப்பொது அணைத்து மருத்துவ மனையும் நிரம்பி வழிகிறது ...லாக் டௌன் அறிவிப்பு ....தெலுங்கானா முதல்வர் ஜோசியர் சொன்னபடி புது செயலகம் பற்றி மும்முரமாக உள்ளார் ...ஹைதராபாதில் காரோண எந்த திசை என்று தெரியாது ....
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
12-ஜூலை-202007:35:40 IST Report Abuse
svs //....பலி சதம் அடித்துள்ளது......//....எடுத்து சொன்னால் இங்குள்ள மக்களுக்கு புரியாது ....பலி எண்ணிக்கை கிரிக்கெட் பாணியில் சொன்னால்தான் கொஞ்சம் எடுபடும் .......ஆனால் பலியானவர் குடும்பத்தின் கதி என்ன ??.....பகுத்தறிவு மாநிலத்தில் நோய் குணமான பிறகும் அடுத்தவனுக்கு படுக்கையை காலி செய்ய மறுக்கும் அறிவார்ந்த எண்ணம் .....சென்னையில் இப்போதுதான் இந்த நோயை பற்றிய பயம் கொஞ்சம் உள்ளது ....அதற்கு கொடுத்த உயிர் பலி ரொம்ப அதிகம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X