மதுரை மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிப்பு | Alarming rise in Covid-19 cases in Madurai | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிப்பு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (2)
Share

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஒரேநாளில் 929 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.



latest tamil news



மாவட்டத்தில் 20 நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சராசரியாக 280 பேர் தினமும் பாதிக்கப்படுகின்றனர். மொத்த பாதிப்பு 5500ஐ கடந்துள்ளது. பலி சதம் அடித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இது மக்களை கவலையில் ஆழ்த்தியது.முதல் மூன்று இடத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை காட்டிலும் டிஸ்சார்ஜ் விகிதம் இங்கு வெகு குறைவு. அங்கு மூன்றில் ஒரு பகுதியினர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து விட்டனர்.


latest tamil news



மதுரையில் மூன்றில் இரு பங்கு நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். அன்றாட பாதிப்பு 200, 300 கடக்கும் நிலையில், டிஸ்சார்ஜ் மட்டும் 40, 50 என இருந்தது.இந்நிலையில் முகாம், வீட்டுத்தனிமை, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த 553 பேர் நேற்று காலையில் டிஸ்சார்ஜ் ஆகினர். மாலையில் மேலும் 376 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2179 ஆக உயர்ந்துள்ளது. இது மதுரை மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மதுரையில் இனி தினமும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். கொரோனாவில் இருந்து 98.5 சதவீதம் பேர் மீண்டு விடுகின்றனர். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X