பொது செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்டங்களுக்கு திரும்பும் கொரோனா ஆட்டம்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
மதுரை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கதறவிட்ட கொரோனா ஆட்டம், மதுரை உள்ளிட்ட 10 தென்மாவட்டங்கள் பக்கம் திரும்புகிறது. இப்போதே சுதாரித்துக் கொண்டு வைரஸின் கொட்டத்தை அடக்க தனித்திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும்.ஜூன் 20க்கு முன்புவரை கொரோனாவால் மதுரை இப்படியொரு பாதிப்பை சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 10, 20 என இருந்த அன்றாட பாதிப்பு
CoronaVirus, Southern District, COVID-19, madurai, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, கொரோனா, வைரஸ், தென்மாவட்டங்கள், பாதிப்பு

மதுரை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கதறவிட்ட கொரோனா ஆட்டம், மதுரை உள்ளிட்ட 10 தென்மாவட்டங்கள் பக்கம் திரும்புகிறது. இப்போதே சுதாரித்துக் கொண்டு வைரஸின் கொட்டத்தை அடக்க தனித்திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும்.

ஜூன் 20க்கு முன்புவரை கொரோனாவால் மதுரை இப்படியொரு பாதிப்பை சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 10, 20 என இருந்த அன்றாட பாதிப்பு திடீரென 200, 300 ஆக எகிறியது. வெறும் இருபது நாளில் 5000 பேரை வைரஸ் தாக்கியது. தினமும் வெளியாகும் கொரோனா பட்டியல் மதுரைவாசிகளை பதைபதைக்க வைக்கிறது. இறப்பு வேகம் சென்னையை காட்டிலும் அசுரத்தனம் காட்டுகிறது. தினமும் கொத்து கொத்தாய் மரணம் நேர்கிறது. மின் மயானங்கள் இடைவிடாது இயங்குகின்றன.


latest tamil news
தொற்றில் இருந்து தப்புமா


இப்போது திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென்மாவட்டங்கள் அனைத்திலும் வைரஸின் தாக்குதல் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்த பாதிப்பை விட இப்போது 10 மடங்கு கூடுதல் பாதிப்பு நேர்கிறது. ஒரு மாதத்தில் இத்தனை மாற்றம்.

மதுரை சென்னையாகிவிட்டது. பிற தென்மாவட்டங்கள் மதுரையாகாமல் தடுப்பது அவசியம். சென்னையில் இருந்து வெளியேறியவர்களை தென்மாவட்டங்களில் அனுமதித்து பரிசோதனை செய்ய தவறியதால் தான் இப்போது கொரோனா பூகம்பமாய் கிளம்பியுள்ளது. கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை இனி அரசு செய்துவிடக்கூடாது. துவக்க நிலையிலேயே தென்மாவட்டங்களை தொற்றில் இருந்து மீட்க பிரத்தியேக திட்டத்தை அவசர நிலையில் தயாரிக்க வேண்டும்.


latest tamil newsஎன்ன செய்ய வேண்டும்


மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறியதாவது:
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீதம் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியை இன்னும் மேம்படுத்த மண்டல வாரியாக மூத்த அதிகாரியை நியமிக்கலாம். தென்மாவட்டங்களுக்கென ஒருங்கிணைப்பு அதிகாரி அவசியம்.

* மதுரையில் தினமும் 3000 பேரை சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற தென்மாவட்டங்களில் இன்னும் பரிசோதனை ஆயிரத்தை தாண்டவில்லை. சில மாவட்டங்களில் 300 முதல் 800 பேரை தான் சோதிக்கின்றனர். பாதிப்புக்கு தகுந்தபடி பரிசோதனையை உயர்த்த வேண்டும்.

* சென்னையை பின்பற்றி மதுரையில் அதிகளவு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதை போல மற்ற மாவட்டங்களில் உள்ள நகரங்களில் அதிகளவு முகாம்களை நடத்த வேண்டும்.

* துவக்க நிலையிலேயே நோயாளிகளை கண்டறிந்து, அறிகுறியில்லாத, லேசான பாதிப்புள்ளோரை முகாம்களில் தனிமைப்படுத்த வேண்டும். வசதி இருப்போருக்கு மதுரையை போன்று வீட்டுத்தனிமையை அனுமதிக்கலாம்.


latest tamil newsகிராமங்களை காப்போம்


* தீவிர பாதிப்புள்ளோரை அனுமதிக்க மருத்துவமனையில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மூச்சுதிணறலால் நோயாளிகள் இறப்பதை தடுக்க ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும். இல்லையென்றால் மதுரையை போன்று இறப்பு விகிதம் அதிகரிக்கும்.

* ஆக்ஸிஜன் குழாய் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணியை துரிதப்படுத்த வேண்டும்.

* பாதிப்பு அதிகரித்த பின்னர் டாக்டர், நர்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிப்பது கடினம். முன்கூட்டியே தேர்வு செய்து பயிற்சி அளிப்பது நலம். இவர்கள் ஏற்றுக்கொள்ளும் தொகையை ஊதியமாக நிர்ணயிக்க முன்வர வேண்டும்.

* மாவட்டங்களுக்கு இடையே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி டூ-வீலர்கள் மாவட்ட எல்லைகளை கடக்கின்றன. இதற்கு கிடுக்கிப்பிடி போட வேண்டும்.

* நகரங்களில் தொற்றின் வேகம் அதிகரிப்பதால், கிராம மக்கள் நகர்ப்புறங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நலம். இது கிராமங்களை தொற்றில் இருந்து காக்க உதவும். இவ்வாறு கூறினர்.


latest tamil news
ஏன் தெற்கே தனித்திட்டம் வேண்டும்


10 மாவட்டங்களின் பாதிப்பு, மேற்கு, மத்திய, கிழக்கில் அமைந்துள்ள 24 மாவட்டங்களுக்கு இணையாக வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அதை தாண்டிவிடும். இறப்பு விகிதத்தை பார்த்தால் பெரும் அதிர்ச்சி. 24 மாவட்டங்களை விட 10 மாவட்டங்களில் 78 பேர் கூடுதலாக இறந்துள்ளனர். ஒரு சில வாரங்களில் தென்மாவட்ட பாதிப்பும் இன்னும் உச்சம் தொடலாம். எனவே தான் தனித்திட்டம், ஒருங்கிணைப்பு தேவைப்படுகின்றன.


மதுரைக்கு வராதீங்க


சென்னையில் பாதிப்பு அதிகமான போது அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு வந்தவர்களால் கொரோனா பரவல் தீவிரமானது. அதில் நேரடியாக அதிகம் பாதிக்கப்பட்டது மதுரை. பின்னர் ஊரடங்கு தளர்வின் போது, இ-பாஸ் தேவையில்லாததால், மதுரை மண்டலத்தில் இருந்த திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தினர் மதுரைக்கு தாராளமாக வந்து சென்றனர். அதன்விளைவு இந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி விட்டது.

திருச்சி, தஞ்சை, கோவை மாவட்டத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மதுரை வந்து சென்றது தெரிந்தது. மதுரையின் கிராமப்பகுதியிலும் கொரோனா தொற்றக்காரணம், அவர்கள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்வது தான்.எனவே மதுரையில் கொரோனாவின் வேகம் குறைவது வரை, இன்னும் சில நாட்கள் மதுரைக்காரர்கள் வெளியே செல்லாதீர்கள். மற்ற மாவட்டத்தினர் மதுரைக்கு வராதீர்கள். இப்போது நாம் வெளியே அலையாமல், சிரமங்களை ஏற்றுக்கொண்டால், விரைவில் கொரோனாவை விரட்டலாம்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
12-ஜூலை-202014:44:25 IST Report Abuse
R S BALA என்று தனியுமோ இந்த கொரோனாவின் தாகம் ... இயல்பாய் வாழும் நாள் எந்நாளோ ?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
12-ஜூலை-202013:24:42 IST Report Abuse
Visu Iyer சமூக பரவல் இல்லை என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்.. இந்த செய்தியின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். . மத்திய சுகாதார துறை.. திட்டவட்டமாக இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.. இந்த செய்தி உண்மையாக இருந்தால் இவர்களுக்கு செய்தி கொடுப்பவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள்.. அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கு களங்கம் விளைவிப்பதாக அவர்கள் மீது nadavadikkai yedukkalaam
Rate this:
Cancel
12-ஜூலை-202012:15:08 IST Report Abuse
kulandhai Kannan இப்போது reverse migrationஆரம்பிக்கும். சென்னை மீண்டும் பாதிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X