சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

உங்க வீட்ல மட்டும் ஹிந்தி படிக்கிறீர்களே..!

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
எப்படி எப்படி... 'தமிழக மக்களே... ஹிந்தி படிக்காதீங்க'ன்னு சொல்லி, போராட்டம் பண்ணி, மக்களை மூடர்களாக்கி, உங்க வீட்ல மட்டும் எல்லாரும் ஹிந்தி படிக்கிறீங்களே... அப்படியா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:அப்போது, நம்மை படிக்காதே என்றவர்கள், இப்போது, பிளஸ் 1 வகுப்பு, சி.பி.எஸ்.இ., பாடத்தில், 'அதை படிக்காதே, இதை படிக்காதே'
ஹிந்தி

எப்படி எப்படி... 'தமிழக மக்களே... ஹிந்தி படிக்காதீங்க'ன்னு சொல்லி, போராட்டம் பண்ணி, மக்களை மூடர்களாக்கி, உங்க வீட்ல மட்டும் எல்லாரும் ஹிந்தி படிக்கிறீங்களே... அப்படியா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:

அப்போது, நம்மை படிக்காதே என்றவர்கள், இப்போது, பிளஸ் 1 வகுப்பு, சி.பி.எஸ்.இ., பாடத்தில், 'அதை படிக்காதே, இதை படிக்காதே' என்கின்றனர். மாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால், தங்கள் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது!

'நல்ல விஷயங்கள் எங்கு நடந்தாலும், அதை எதிர்ப்பதில் முழு ஆர்வமாக உள்ளீர்கள் போலும்...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா அறிக்கை:

தேர்தல்களின் போது, 'டிஜிட்டல்' பிரசாரம் செய்யவும், ௬௫ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், தபால் ஓட்டுகள் போடவும், தேர்தல் நடைமுறைகளை திருத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதை, திரும்ப பெற வேண்டும்.

'மாணவர்கள் எல்லாம், வீடுகளில், ஜாலியாக உள்ளனர். அவர்களை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் தான், இந்த விஷயத்தில் குதிக்கின்றன...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மாணவரணி செயலர் எழிலரசன் அறிக்கை:

பஞ்சாப் மாநிலத்தில், கல்லுாரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுபோல, தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும். அதை விடுத்து, மத்திய, மாநில அரசுகள், செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீருவோம் என அடம் பிடிக்கின்றன. முடிவை மாற்றிக் கொள்ளவிடில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.

'உங்களுக்கு மட்டுமென்ன; எல்லாருக்கும் அது தான் இன்னும் ஆச்சர்யமாக உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

சீனாவில் தான், கொரோனா முதலில் தாக்கியது. அதை, பிற நகரங்களுக்கு அதிகம் பரவாமல், சீனா எப்படி கட்டுப்படுத்தியது என்பதற்கு, மூன்று மாதங்களாக விடை தெரியாமல் வியக்கிறேன்.

'அவர் வரவே மாட்டார் என சொல்லி இருந்தால், இந்த செய்தியே வெளியே வந்திருக்காதே; பக்குவமாக பத்திரிகையாளர்களை சந்திக்கணும்...' என, பாடம் நடத்த தோன்றும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி:

கர்நாடகா சிறையில் உள்ள சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்தால், அ.தி.மு.க.,வை வழிநடத்துவது யார் என, கட்சி தலைமை தான் முடிவு செய்யும். நான் சாதாரண மாவட்ட செயலர்; இதில் கருத்து கூற முடியாது.

'முதல்வர் அலுவலக அதிகாரிக்கு தொடர்பு இருக்கிறது என, ஊடகங்களில் செய்தி வெளியானதும், முழு விசாரணை கேட்கிறீர்கள்; முதலிலேயே இதைக் கேட்டிருக்கலாமே...' என, கேட்கத் துாண்டும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை:


latest tamil news
துாதரக பொருட்களில் தங்கத்தை மறைத்துக் கடத்த முயன்றது, மிகவும் தீவிரமான குற்றம். இதுகுறித்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்துவதாக தெரிகிறது. இந்த குற்றத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் உள்ள அனைத்து தொடர்புகளையும் கண்டறிய வேண்டும்.

'சேவைகளில் பல வகை உண்டு. இதில், நீங்கள் செய்துள்ளது, மருத்துவமனை கட்டட சேவை... பிறகு, முதியோருக்கான சிகிச்சை செய்யப் போறீங்க பாருங்க... அது மிகச் சிறந்த சேவை...' என, பாராட்டத் தோன்றும் வகையில், முதியோர் நல அறக்கட்டளை டாக்டர் வி.எஸ்.நடராஜன் அறிக்கை:

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்த பிறகு, நம், தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு, மூத்த குடிமக்களுக்கு தம் பணியை செய்யும். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

'எப்படி, இதுபோல, திடீரென ஒரு இயக்கத்தை உருவாக்க முடிகிறது...' என, கேள்வி எழுப்பத் தோன்றும் வகையில், காவல் நிலைய சித்ரவதை எதிர்ப்பு இயக்கம் அறிக்கை:

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உட்பட, பல காவல் நிலையங்களில், பொதுமக்களை விசாரணைக்கு போலீசாரால் அழைத்துச் சென்று, ஏராளமானோர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அந்த குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.

'கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களில் பலர், அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்; சிலர், அப்படியில்லை...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேட்டி:

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவசியம் இன்றி, வெளியே வரக் கூடாது.

'கொரோனா நேரத்தில், மாணவர்களின் வசதிக்கு ஏற்ப, உத்தரவுகளை மாற்ற வேண்டியுள்ளது. இதனால் உங்களுக்கு, இவ்வளவு பெரிய சந்தேகம் வரத் தேவையில்லை...' என, தடாலடியாக பதில் கூறத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் அறிக்கை:

தமிழக கல்வித்துறை, உத்தரவுகளை மாற்றி அடிக்கடி வெளியிடும் அறிவிப்புகள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பெரும் குழப்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால், கல்வித்துறையை இயக்குவது யார் என்ற கேள்வி எழுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
14-ஜூலை-202022:56:09 IST Report Abuse
ராமதாசன் ஹிந்தி / ஆங்கிலம் படிக்காவிடில் அப்புறம் எப்படி மத்திய அரசில் அமைச்சராவது.. கழக உறுப்பினர் யாரும் படிக்க கூடாது - தலைவர் குடும்ப உறுப்பினர் மட்டுமே படிக்க வேண்டும்
Rate this:
Cancel
ravikumar - MUSCAT,ஓமன்
13-ஜூலை-202011:13:07 IST Report Abuse
ravikumar மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்றமே .வேண்டும் வேண்டாம் என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து .இதில் அரசியல் வேண்டாம் .....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜூலை-202009:23:16 IST Report Abuse
Sampath Kumar தமிழா நாட்டில் தமிழன் வாழக்கூடாது ???/ எந்த புண்ணியவான் மண்டியில் உதித்த yosanaio தெரிய வில்லை அனால் தமிழன் மண்டியில் மட்டும் ஏறவே இல்லை என்பது தான் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X