பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: சங்க கால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புத்தக அறிமுகம்: சங்க கால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.

01. சங்க கால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

ஆசிரியர்: முனைவர் சந்திரிகா சுப்ரமணியன்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
21, 'லட்சுமி' சத்யசாய் நகர், மதுரை - 625 003.
தொலைபேசி: 1800 425 7700 (Toll Free)
அலைபேசி: 99443 09611
பக்கம்: 144 விலை: ரூ.250

அறிஞர்களை, 'நாலும் தெரிந்தவர்' என்பர். உண்மையிலேயே, இந்த சொலவடைக்குப் பொருத்தமானவர், நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி தான். இவர், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், கணித்தமிழ் வளர்ச்சி, நாணயவியல் ஆய்வு, பத்திரிகை ஆசிரியர் பணி என்ற தளங்களில் புரிந்துள்ள சாதனைகளை கூறுகிறது, இந்த வாழ்க்கை வரலாற்று நுால்.
இவரது கல்விப் பயணம், சூறாவளியானது. எல்லா நிலைகளிலும் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். உண்மையான கல்வியைக் காடு, மேடுகளிலும், மலைகளிலும் தான் கற்றிருக்கிறார். உயிரியலில் துவங்கிய கல்லுாரிக் கல்வி, புவியியல் பாடத்தில் நிலைகொண்டிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில், சங்க கால வரையறையை, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் அறிஞர்கள். இந்த பழமை, குறைந்த பட்ச எல்லை தான்; அதிக பட்ச எல்லை கி.மு., 5ம் நுாற்றாண்டுக்கும் முற்பட்டது என்று, நாணயவியல் ஆய்வுகள் வாயிலாக நிறுவியுள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. சங்க காலப் பாண்டியனும், சோழனும், சேரனும் கட்டிய அரண்மனைகள் இப்போது இல்லை. அவர்களைப் பாடிய சங்க இலக்கியங்கள் சில மட்டுமே கிடைத்துள்ளன.
இலக்கிய ஆதாரங்களை, ஆய்வுலகம் ஏற்க தயங்கிய சூழ்நிலையில், பொருத்தமான வரலாற்று ஆதாரங்களாக, பெருவழுதி, மாக்கோதை என்று அடுக்கடுக்காக சேர, சோழ, பாண்டியர் வெளியிட்ட நாணயங்களைக் கண்டுபிடித்து, ஆய்வு செய்து நிறுவியதால், சங்க கால நாணயவியலின் தந்தை என்னும் பெரும் தகுதியைப் பெற்றுள்ளார். சங்க கால நாணயவியல் ஆய்வில் மேன்மை கொண்டதால் தான், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் உயரிய, தொல்காப்பியர் விருதை, ஜனாதிபதியின் திருக்கரத்தால் இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
எழுத்துச் சீர்மையை முதன் முதலில் பத்திரிகையில் பயன்படுத்திய பெருமையுடன், 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்' என்ற நுாலையும் படைத்துள்ளார். பண்டைத் தமிழ் எழுத்து முறை பற்றியும், நாணயவியல் ஆய்வு பற்றியும், 19 நுால்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்ததுடன், 57 ஆய்வுக் கட்டுரைகளைப் பன்னாட்டு ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து பெருமை பெற்றுள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி.
கணினி எழுத்துகள், அச்சுக்கு ஏற்ற வடிவத்தில் இல்லாத சூழலில், அழகிய அச்சு எழுத்து வடிவங்களை உருவாக்கி, தமிழ் அச்சு ஊடகத்திற்கு முன்னோடி வழிகாட்டியாக திகழ்கிறார். பன்முக ஆற்றலுடன், நாணயவியல் ஆய்வில் முன்னோடியாக செயல்பட்டுள்ளதை இந்த நுால் எடுத்துக் காட்டுகிறது. எளிமையான மொழி நடையில் அமைந்துள்ளது. வாழ்க்கை வரலாற்று இலக்கிய உலகில், குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது.
'பள்ளி விடுமுறை விட்டால் போதும், முதல் ஆளாக வந்து விடுவார். படித்துறையில் இறங்கி, குளத்தின் மறுகரை வரை ஆர்வத்துடன் நீந்தி மகிழ்வார். கிராமச் சிறுவர்கள் எல்லாம், அங்கு தான் கூடுவர். கூட்டம் சேர்ந்ததும் நீச்சல் போட்டி, தினுசு தினுசான குட்டிக் கரணம் என, உற்சாகமாக ஆட்டம் நடக்கும்...' இது, பக்கம், 21ல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள, 'தினுசு தினுசான' என்னும் சொல்லாட்சி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரியது. இது போன்ற வட்டார வழக்குகள், நுாலில் பல இடங்களில் மிளிர்ந்து சிறப்பு பெறுகின்றன.
முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புடைய கல்வியாளர்கள், கணித்தமிழ் அறிஞர்கள், மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் வழங்கியுள்ள தகவல்கள் மிக முக்கியமானவை. அன்பு, உண்மை, உழைப்பு, அடக்கம், அறிவுத்தேடல், மன்னிக்கும் மனப்பான்மை, எளிய அணுகுமுறை என, உயர்ந்த பண்புகளின் இருப்பிடமாக அவர் திகழ்வதை, அறிஞர்களின் அனுபவ மொழிகள் உணர்த்துகின்றன.
வாழ்க்கை வரலாற்று நுால்களில் இது மாறுபட்டது. சாதனையாளர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையுடன், சங்க கால வரலாறும், தமிழ் எழுத்துச் சீர்திருத்த வரலாறும், கணித்தமிழ் வரலாறும், இதழியல் வரலாறும் இணைந்து வெளிப்படுகின்றன.
'இன்டர் மீடியட்' படிக்கும் வரை, காலில் செருப்பு இன்றி நடந்ததையும், கசங்கிய சட்டை அணிந்ததையும், கோலி அடித்ததையும், பம்பரம் விளையாடியதையும் இன்னும் பலவற்றையும், உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துகிறது. அந்த காலத்தில் நிலவிய கல்விச் சூழலையும், வாழ்க்கையையும், சுதந்திர போராட்ட கொந்தளிப்பையும் வெளிப்படுத்துகிறது. பாடங்களை கற்றுத் தரும் அனுபவ செறிவு மிக்க நுால்.
- முகிலை ராசபாண்டியன்

02. நகுலன் கதைகள்

தொகுப்பாசிரியர்: சண்முகசுந்தரம்
வெளியீடு: காவ்யா, கோடம்பாக்கம், சென்னை - 24.
அலைபேசி: 98404 80232
பக்கம்: 349 விலை: ரூ.350


latest tamil news




அகம்பாவமற்ற மொழியில் எழுதப்பட்டவை நகுலன் படைப்புகள். அவர் எழுதிய சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கதைகள், குறுநாவல்கள் தேடி கண்டுபிடித்து தொகுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை பற்றிய வெள்ளை அறிக்கையாக உள்ளன பல கதைகள். கற்றலும், கற்பித்தலுமாக மிளிர்கின்றன. தொகுப்பை உருவாக்குவதற்கு பட்ட சிரமங்களை, பதிப்புரையில் சுருக்கமாக பகிர்ந்துள்ளார் தொகுப்பாசிரியர்.
'கதைகளை தொகுத்து, ஒரு பதிப்பாளரிடம் கொடுத்தேன். அவர் தொலைத்து விட்டார். எப்போது, எதிலெல்லாம் எழுதினேன் என்பது என் நினைவில் இல்லை. முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்...' என, நகுலன் கூறியதாக பதிவு செய்துள்ளார். படைப்புகளைக் கண்டுபிடித்த விதம் பற்றியும் விளக்கியுள்ளார். நகுலன் படைப்புகள் பற்றிய முன்னோட்ட பார்வையுடன் ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. படிக்கும் போது எளிய விசாரணையாக, பல கேள்விகள் வந்து நிற்கும்.

03. முருகப் பெருமான் ஆலயங்கள்

ஆசிரியர்: ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
7, மல்லீஸ்வரர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.
அலைபேசி: 94441 75218
பக்கம்: 178 விலை: ரூ.200


latest tamil news




முருக கடவுளைப் பற்றிய தொகுப்பு நுால். அறுபடை வீடு கொண்ட கோவில்கள் மட்டுமல்லாது, குன்றத்தில் அமைந்த கோவில், குகைக் கோவில், குடவரைக் கோவில்கள் பற்றிய விளக்கம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பகுப்பாக அமைந்துள்ளது. முதற்பகுதியில் முருகனின் சிறப்புடன், 108 போற்றிகள் இடம் பெறுகின்றன.
இரண்டாவது பகுதி, 47 துணைத் தலைப்புகளை கொண்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள முருகன் கோவில் சிறப்பும் தரப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, இலங்கை, மலேஷியா, ஜெர்மனி, இங்கிலாந்து முருகன் கோவில் பற்றிய தகவல்களும் உள்ளன. ஆறுமுகத்தின் தத்துவம், அறுமுகங்களுக்குரிய பொருள் தனியே தரப்பட்டுள்ளது.
இங்கிலாந்து லெஸ்டர் நகரில் உள்ள முருகன் கோவில் ஈசானிய மூலையில், ஒன்பது கிரகங்களும் ஆயுதம் ஏந்தி தோன்றும் அரிய தகவலையும் பதிவு செய்துள்ளது. முருக கடவுளின் சிறப்புகளை வழங்கும் களஞ்சியம்.
- பேராசிரியர் ரா.நாராயணன்

04. புயலைக் கிளப்பும் ஒக்கி புயல் விவாதங்கள்

ஆசிரியர்: வழக்கறிஞர் லிங்கன்
வெளியீடு: நெய்தல் வெளி
153 சி, ஈத்தாமொழி சாலை, நாகர்கோவில் - 2.
அலைபேசி: 93675 10043
பக்கம்: 42 விலை: ரூ.30


latest tamil news




கடலை நம்பி வாழும் மீனவ சமுதாயம், சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் அடையும் துன்பத்தையும், அவலத்தையும் முன்னிலைப்படுத்தியுள்ள நுால்.
ஒக்கி புயலின் போது, கடலில் தத்தளித்து, கொடும் துன்பங்களை அனுபவித்த மீனவர்கள் பற்றியும், அவர்களின் குடும்ப அவலம் பற்றியும், கேள்வி - பதில் பாணியில், விவாதத்தை முன் வைக்கிறது. நெய்தல் நில மக்களின் துயரங்களை, புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

05. திருக்குறள் கடவுள் கோட்பாடு

ஆசிரியர்: பேராசிரியர் க.மணி
வெளியீடு: அபயம் பப்ளிஷர்ஸ்
அலைபேசி: 90956 05546
பக்கம்: 96 விலை: ரூ.50

உலகப் பொதுமறை திருக்குறள், சமய, ஆன்மிக விஷயங்களில், எந்த சார்பும் அற்றதாகவே இருக்கிறது. மெய்ப்பொருள், செம்பொருள், துாய அறிவு என கடவுளை வள்ளுவர் குறிப்பிடுகிறார். இந்த நுாலில், திருக்குறளில் கடவுள் எங்கனம் சித்தரிக்கப்படுகிறார் என்பது விளக்கப்படுகிறது.
இயற்கை நியதியின் ஆழமும், அகலமும் யாரும் அறிய முடியாதது. அது அறவாழி என்கிறார். இறைவன் அறவாழி அந்தணன். அந்தணன் என்பது, சான்றோரைக் குறிக்கும். வள்ளுவ அமுதத்தை வாரி வழங்கும் நன்னுால்.
- எஸ்.குரு

06. இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்கள்

ஆசிரியர்: அனிதா
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்
சென்னை - 49.
அலைபேசி: 94440 47790
பக்கம்: 120 விலை: ரூ.40


latest tamil news




முக்கிய நகரங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலம், நம் நாடு பற்றி முழுமையாக அறியலாம். இந்திய நகரங்களின் வளர்ச்சியை சிறு குறிப்புகளாக பதிவு செய்துள்ள நுால். நகரங்களின் முக்கியத்துவம், பகுதிகளின் வளர்ச்சி பற்றி தகவல்கள் நிரம்பியுள்ளன.
சிறு, துணை தலைப்புகளில், எளிமையாக எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான வளர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நகரங்கள் பற்றிய சுருக்க கையேடு.
- விஷ்வா

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-202014:43:01 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் அய்யா இவ்வளவு சொல்லும் நீங்கள் சங்க காலத்து இதிகாசங்களில் ஜாதி என்று ஒன்று இல்லவே இல்லை எந்த இதிகாசத்தில் இல்லையே அப்போ எப்போ தான் ஜாதியை கொண்டு வந்தார்கள் இதையும் சொல்லுங்கள் ஐயா
Rate this:
சத்துரு, பெங்களூர்ஆங்கில வணிக காலத்தில் பெஸ்கி, கால்டுவெல் ஆகியோர்களால் மதமாற்றம் செய்யவும், வணிக பொருட்களை மலிவாக பெறவும் செய்யப் பட்ட சூழ்ச்சி தான் தென்நாடுகளில் ஆரிய திராவிட பிரிவினை மற்றும் திராவிடத்துக்கு உள்ளே ஜாதி உட்பிரிவு பேதமும். பின்னர் திராவிட இயக்கம் மூலமாக இந்த பணி இந்த ஜாதி பிரிவினை வளர்க்கப்பட்டு பெரும் பிளவுகள் ஏற்படுத்தும் பணி செயல்படுத்தப்பட்டது. இந்த பணியில் நாட்டுடன் ஈடுபட்டு அரசியல் லாபமும் பொருளாதார லாபமும் பெற்ற நபர்களை நாடே அறியும். இப்போது மேலும் சிலர் தங்களது பொருளாதார மேன்மை கருதி தமிழ் இன வேறுபாடு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்....
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
12-ஜூலை-202013:11:17 IST Report Abuse
M.COM.N.K.K. இனி ஞாயிறுதோறும் புத்தக திருவிழாதான் மனமகிழ்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X