பொது செய்தி

இந்தியா

பல வசதிகளுடன் கூடிய ஆட்டோ; பாராட்டிய தொழிலதிபர்கள்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Auto, Anand Mahindra, Mumbai, Hand Washing, ஆட்டோ, மும்பை, ஆனந்த் மகிந்திரா, வசதிகள்

மும்பை: ஒரே ஆட்டோவில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு தொழிலதிபர்கள் ஆனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஸ் மரிவாலா ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் என பல்வேறு தடுப்பு முறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகின்றனர். ஆனால் சிலர் மட்டுமே அதை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவில் பல்வேறு வசதிகளுடன் மாற்றியுள்ளார். இதனை பலரும் பாராட்டியுள்ளனர்.


latest tamil news
ஆட்டோவில் குப்கைகளை பிரித்து போடுவதற்கான இடமும், கைகளை கழுவ வாஷ்பேஷின் வசதியும் உள்ளது. கைகழுவும் தண்ணீர் வீணாகாமல் இருக்க, அருகில் இருக்கும் சில செடிகளுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுபோக, குடிநீர், செல்போன் சார்ஜ், வைபை, கூலர் பேன், செல்போனுடன் இணைக்கும் வசதிக்கொண்ட டிவி மட்டுமல்லாமல், கொரோனா தொடர்பான உதவி எண்கள் மற்றும் டாக்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.


latest tamil news


ஆச்சரியமிகுந்த ஆட்டோவை இணையத்தில் பார்த்த தொழிலதிபர்கள் ஆனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஸ் மரிவாலா ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டரில், ‛கொரோனா சோதனையிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது தூய்மை இந்தியாவை துரிதப்படுத்துகிறது,' எனப் பதிவிட்டுள்ளார். இந்த ஆட்டோவில் வயதானோர் மற்றும் புதுமண தம்பதிகள் இலவச பயணமும் மேற்கொள்ளலாம் என்கிறார் ஓட்டுநர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
12-ஜூலை-202019:21:56 IST Report Abuse
S. Narayanan நம்ம ஊர்ல இதை போல ஆரம்பித்தாள் ஏறும் பொது இருக்கும் பல பொருட்கள் இறங்கும் போது காணாமல் போகும்.
Rate this:
Cancel
sivakumar - chennai,இந்தியா
12-ஜூலை-202017:17:10 IST Report Abuse
sivakumar முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🌷💐 ஆனால் புதுமண தம்பதிக்கு இலவசம் கான்செப்ட் புதுசா இருக்கு 🍀🙄🙄
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் பார்த்து சுடலை கண்ணில் பட்டால் Hand wash liquidயை ஆட்டைய போட்டுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X