குஜராத் மாநில காங்., செயல் தலைவரானார் ஹர்திக்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
cong, gujarat, hardik patel, hardik, sonia, sonia gandhi, rahul, rahul gandhi, priyanka, priyanka gandhi, gujarat congress, congress, gujarat, ahmed patel, ahmed,  காங்கிரஸ், காங், ஹர்திக்படேல், ஹர்திக், சோனியா, சோனியா காந்தி, ராகுல், ராகுல் காந்தி,  பிரியங்கா, பிரியங்கா வாத்ரா, அகமது படேல், அகமது,

புதுடில்லி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜ.,வை எதிர்கொள்ள, ஹர்திக் படேலை, குஜராத் மாநில செயல் தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.

கடந்த 2017 ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், ராகுலின் நம்பிக்கைக்குரியவர்களாக ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகூர் மற்றும் ஹர்திக் படேல் திகழ்ந்தனர். அவர்களும் கடுமையாக உழைத்து, மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,விற்கு சவாலை ஏற்படுத்தினர். இருப்பினும், தற்போது காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படேல் மட்டுமே உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், அவரது கனவு நிறைவேறவில்லை.

அரசியலில் அவருக்கு அனுபவம் குறைவு என்றாலும், கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஹர்திக்கை காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டது. இந்நிலையில் அவருக்கு, குஜராத் மாநில செயல் தலைவர் பதவியை அளித்துள்ளது. இதன் பின்னணியில் ராகுல் உள்ளார் என நம்பப்படுகிறது. நேற்று, சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து, ஹர்திக் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானது.

ஹர்திக்கிற்கும் ராகுலுக்கும் இடையே நல்ல உறவு உள்ள நிலையில், அவரது நியமனம், கட்சியினருக்கு ராகுல் விடுத்த சமிஞ்கைகளாகவே கருதப்படுகிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகியான அகமது படேலுக்கு பதில் கொடுக்கும் வகையில், ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுலுக்கும் அகமது படேலுக்கும், நல்ல பணி சூழல் நிலவியது கிடையாது. சோனியாவின் அரசியல் ஆலோசகராக உள்ள அகமது படேல் தற்போது, அமலாக்கத்துறையினரின் கிடுக்கிப்பிடியில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்க ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அகமது படேலுக்கு ஆதரவாக சோனியா குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட இதுவரை பேசவில்லை. இதன் மூலம், அவர்கள், அகமது படேலிடம் இருந்து விலகி செல்வது தெரியவந்துள்ளது. குஜராத்தில் மோடி - அமித்ஷா கூட்டணியை சமாளிக்க, அவர்களை எதிர்க்கவும், புதிய தலைமையை தேட ராகுலும், காங்கிரசும் முடிவு செய்தனர். ஹர்திக் நியமனம் மூலம், கட்சிக்கும், மூத்த தலைவர்களுக்கும் ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsநேற்று சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில், ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என கேரள எம்.பி.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாததால், அவர் பதவியில் இருந்து விலகினார். கட்சியில், தனது ஆதரவாளர்கள் முக்கிய முடிவு எடுக்க வேண்டும். அதற்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

ரபேல் ஒப்பந்தத்தில் தனது கருத்திற்கு மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை; இதனால், கட்சிக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை என ராகுல் கருதினார். இதற்கு பிரியங்கா ஆதரவு அளித்தார். இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் கவுரவ் கோகோய் மற்றும் கேரள மாநில எம்.பி.,க்கள், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் மீண்டும் ஏற்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், சோனியாவும், ராகுலும் மவுனம் காத்தனர். இதனால், ராகுல் மீண்டும் தலைவர் பதவிக்கு வந்தால், கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் நடக்க அனுமதிக்க மாட்டார். ராகுலின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள திக்விஜய் சிங், இதில் பிரச்னை உள்ளவர்கள் கட்சியை விட்டு செல்லலாம் எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜூலை-202005:35:20 IST Report Abuse
 Muruga Vel அமைதியான முறையில் நிறைய ஏழைகளுக்கு சேவை செய்கிறார் ..சேவை தொடர இவர் இன்னமும் நன்றாக வாழட்டும் ..
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
12-ஜூலை-202017:57:53 IST Report Abuse
Balasubramanian Ramanathan இனிமேல் காங்கிரஸ் கட்சி இந்த மாதிரி ரவுடிகளை நம்பத்தான் இருக்க வேண்டும்.
Rate this:
12-ஜூலை-202019:09:31 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் இருந்த கழிசடை இதை சொல்லுது...
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
12-ஜூலை-202019:20:52 IST Report Abuse
வல்வில் ஓரிஅகிலேஷ் உருவாக்கினார் என்றால், கடந்த மூன்று வருடங்களாக யார் வளர்த்தனர்?...
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
12-ஜூலை-202019:31:45 IST Report Abuse
 Ganapathy Subramanianungalin pathive ungal katchiyin thakuthiyai kaattukirathe?...
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
12-ஜூலை-202020:11:37 IST Report Abuse
வல்வில் ஓரிஎன்ன எங்க தகுதி நீ சுடலை கட்டுமரம் என்று சொல்லுகிராய் அப்போ உன் தகுதி தெரியவில்லையா உங்களுக்கு உங்கள் WAY தான் பதில் இப்போ தெரிகிறதா...
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-202017:25:52 IST Report Abuse
Ramona இவன் கிடக்கறான் ஒரு டுபாக்... கலவரம் தான் இவன் மூலதனம், மைனாரிட்டி ஓட்டு எங்கே கிடைக்கும் என்று பார்த்து அங்கே நிற்பான்,நிச்சயமாக டெப்ஸிட் கிடைக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X