நிதி வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஏன் பிரதமர் பயப்படுகிறார்?: ராகுல்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
Rahul, PM Cares, PM CARES Fund row, PM Modi, names of donors, Rahul Gandhi, Modi, PM, ராகுல், பிஎம்கேர்ஸ், பிரதமர், மோடி

புதுடில்லி: பி.எம்.கேர்ஸ்க்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் என காங்., எம்பி ராகுல் கேள்வி எழுப்பினார்.

கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் திரட்டும் வகையில் பி.எம்.கேர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்கீழ் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட்டது. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் நிலையில், பி.எம்.கேர்ஸ் எதற்காக என்று ஆரம்பம் முதலே எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்தன. மேலும், பி.எம் கேர் செயல்படும் முறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவில் காங்., மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, 'பி.எம்.கேர்ஸ்க்கு நிதி வழங்கியவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டார். ஆனால், பா.ஜ., உறுப்பினர்கள் பி.எம்.கேர்ஸ் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


இது குறித்து ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பி.எம்.கேர்ஸ்க்கு யாரெல்லாம் நிதி வழங்கினார்கள் என்ற விவரத்தை வெளியிடுவதற்கு பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? சீன நிறுவனங்களான ஹூவாய், ஷியோமி, டிக்டாக், ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் பணம் வழங்கியுள்ளன என அனைவருக்கும் தெரியும். எதற்காக அவர் தகவல்களை வெளியிட மறுக்கிறார்?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
12-ஜூலை-202021:42:46 IST Report Abuse
Raja முதல்ல ராஜிவ் பவுண்டேசன் டிரஸ்ட்டுக்கு வந்த நிதி விவரங்களை சொல்லு.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
12-ஜூலை-202019:42:28 IST Report Abuse
Raj கணக்கு கேட்ட எம்ஜிய்யரே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராகுல் எம்மாத்திரம். பிஜேபி கட்சி நிதியில் வரவு வச்சாச்சு
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-202018:42:20 IST Report Abuse
SAPERE AUDE அப்படி விவரங்களை கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு ட்விட்டரில் எழுத சௌகரியமாக இருக்கும் இந்த வேலையில்லாத மாஜி தலைவருக்கு.இவருக்கு ஏதாவது வேலையை இவரது தாயார் கொடுத்தால்தான் இந்த உபத்திரவம் நிற்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X