பொது செய்தி

இந்தியா

கவர்னர் மாளிகை ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா: தனிமைபடுத்தி கொண்ட கவர்னர்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
maharastra, governor, raj bhavan, corona crisis, covid19 in india, Coronavirus, Corona, Covid-19, மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, கவர்னர், கொரோனா, ஊழியர்கள்,

மும்பை: மஹாராஷ்டிரா கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 18 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் அங்கு 8,139 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிப்பு 2,46,600 ஆக அதிகரித்துள்ளது. 10,116 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மும்பை உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, அங்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய விஐபிக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதியானது.


latest tamil news



இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 18 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கவர்னரை நேரில் சந்தித்து பேசும் ஊழியர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி , தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-202019:08:23 IST Report Abuse
ஆப்பு ஐயோ பாவம்... கெவுனரு... இத்தனை சின்னஞ்சிறிய வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்ய்றாரு. விரைவில் கொரோனா ஒழிந்தோட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X