பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஜூலை 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Madurai, Lockdown, Extended, EPS, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, மதுரை, ஊரடங்கு, நீட்டிப்பு, இபிஎஸ்

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கினை நீட்டித்து முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 12ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.


latest tamil news


இந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்ட பகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால், நோய் தொற்று உள்ளவர்களை அனைவரையும் கண்டறிந்து, கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் என்பதால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஜூலை 14ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. எனவே, அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அதுவரையில் தொடரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-202019:05:59 IST Report Abuse
ஆப்பு கொரோனாவை ஒழிச்சுக் கட்டாம விட மாட்டோம்.
Rate this:
Cancel
12-ஜூலை-202015:38:58 IST Report Abuse
முனி தமிழ்நாடு டாஸ்மாக் முழு ஊரடங்கு போடு அமைச்சரே.....
Rate this:
Cancel
12-ஜூலை-202015:09:51 IST Report Abuse
முனி மதுரையில் ஊரடங்கு தேவையில்லை 19நாள் மக்கள் பசியால் இருக்கிறார்அது அரசியல் வாதி கண்ணுதெரியலசுயநலவாதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X