'ஒவ்வொரு மரணத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்': சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஐ.நா., கருத்து

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement

ஜெனீவா: 'ஒவ்வொரு மரணத்தையும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்' என, சாத்தான் குளம் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், 59, அவரது மகன் பெனிக்ஸ், 31, ஆகியோர், ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட நேரம் தாண்டி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., கருத்து தெரிவித்துள்ளது.latest tamil news
ஐ.நா., பொதுச்செயலாளர் அண்டோனியா குத்ரெசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், 'ஒவ்வொரு மரணமும் சட்டத்துக்கு உட்பட்டு முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஅமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினதவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து அடித்தனர். இதில், மூச்சித் திணறல் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் போலீசாரின் அராஜகத்துக்கு எதிராகவும், கறுப்பின மக்கள் மீதானான அடக்கு முறைக்கு எதிராகவும் வலிமையான குரல் கொடுக்கக் காரணமாக அமைந்தது. அதேபோல், சாத்தான் குளம் விவகாரமும் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202021:59:37 IST Report Abuse
Tamilan உலகமெல்லாம் இவனை ஒதுக்கிவைத்த விரக்தியில் எதோ உளருகிறான் . தன்மானம் காக்க பயங்கரவாதிகளை நாடுவதைத்தவிர இவனுக்கு வேறு வழியில்லை .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202021:56:36 IST Report Abuse
Tamilan பல லச்சம் பேர் உயிரிழக்க காரணமான இவனை உடனடியாக தூக்கிலிடவேண்டும் .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202021:55:23 IST Report Abuse
Tamilan தன்னுடைய தவறால் கோராநாவில் லச்சம் பேரை பலிகொடுத்த விரக்தியில் என்னென்னவோ உளறுறான் இவன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X