நான் சந்தோஷ் வந்திருக்கேன்,நல்லாயிருக்கீங்களா?

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பி.கே.சந்தோஷ்மூன்றாமாண்டு கல்லுாரி மாணவர், தற்போது சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளிஇவருக்கான பணி வீடு வீடாகப் போய் மக்களை பாிசோதித்து அது பற்றிய ரிப்போர்ட்டை மேலதிகாரிகளுக்கு தருவது.அரசு வேலை என்றாலே அலட்சியமாகப் பணியாற்றலாம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக இருந்தாலும் அப்பழுக்கில்லாமல் இவர்
latest tamil news


பி.கே.சந்தோஷ்

மூன்றாமாண்டு கல்லுாரி மாணவர், தற்போது சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளி

இவருக்கான பணி வீடு வீடாகப் போய் மக்களை பாிசோதித்து அது பற்றிய ரிப்போர்ட்டை மேலதிகாரிகளுக்கு தருவது.

அரசு வேலை என்றாலே அலட்சியமாகப் பணியாற்றலாம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக இருந்தாலும் அப்பழுக்கில்லாமல் இவர் செய்துவரும் பணியை மக்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.


latest tamil newsசென்னை வில்லிவாக்கம் 95 டிவிஷனுக்கு உள்பட்ட சன்னதி தெரு,பிள்ளையார் கோவில் தெரு உள்ளீட்ட சில தெருக்களில் உள்ள 157 வீடுகளில் உள்ள 640 குடும்ப உறுப்பினர்களை அன்றாடம் பார்த்து அவர்கள் உடல் நலன் குறித்து அரசுக்கு அறிக்கை தரவேண்டியது இவரது பொறுப்பு.

கடந்த நுாறு நாட்களுக்கு மேலாக ஒரு நாள் விடுமுறை எடுக்காமல் காலை 7:30 மணி முதல் மாலை 4 மணி வரை இவர்கள் அத்தனை பேரையும் பார்த்து பேசி மருத்துவ குறிப்பு எடுத்து அனுப்பிவருகிறார்.

தெருவில் வசிப்பவர்களின் பெயர் பட்டியல்,கையில் ஒரு தெர்மல் ஸ்கேன்,முகத்தில் ஒரு மாஸ்க்குடன் வீடு வீடாகப் போய் நான் சந்தோஷ் வந்திருக்கேன் நல்லாயிருக்கீங்களா? என்ற அன்பு விசாரிப்புடன் இவரது சேவை ஆரம்பிக்கிறது பின் அப்படியே மாலை வரை தொடர்கிறது.

ரிப்போர்ட் என்பது வேறு ஒன்றுமில்லை வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை வாசலுக்கு வரச்சொல்லி அவர்களது அடையாள அட்டையை சரிபார்த்துவிட்டு பின் தெர்மல் ஸ்கேன் மூலம் யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பதுதான்.யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அதை குறித்துக் கொண்டு மேலதிகாரியிடம் சொல்வோம் அவர்கள் டாக்டரை அனுப்பி காய்ச்சலுக்கான மருந்து கொடுப்பர் சில நாளில் குணமாகவிட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற அடுத்தகட்டத்திற்கு செல்வர்.

ஆரம்பத்தில் வீட்டிற்கு போன போது எரிச்சலையும் கோபத்தையும் காட்டி சிலர் விரட்டத்தான் செய்தனர் அவர்களிடம் பொறுமையாகப் பேசித்தான் ரிப்போர்ட் பெறவேண்டியிருந்தது ஆனால் மிகுந்த சகிப்புதன்மை மற்றம் அன்பான எனது அணுகுமுறையை பார்த்து மக்கள் இப்போது என்னிடம் மிகவும் பாசம் காட்டுகின்றனர்.

வயதானவர்கள் வீட்டிற்கு போனால் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பா? எங்களை விசாரிக்க உன்னை விட்டா யார் இருக்கா? என்கின்றனர்.மேலும் சிலர் லேசா காய்ச்சலா இருக்கு கொஞ்சம் நல்லா பாரு என்று அவர்களே முன்வருகின்றனர்.

லாக் டவுன் காரணமாக படிப்பு பாதியில் இருக்கிறது குடும்பத்தை ஒற்றை ஆளாக இருந்து சுமந்த அண்ணனுக்கும் வேலை இல்லை அப்பா இல்லை அம்மா குடும்பத்தலைவி வீட்டில் சாப்பிடணும் செலவை சமாளிக்கணும் என்ற நிலையில் இந்த ஒப்பந்த வேலை தெய்வம் போல தேடி வந்தது
வேலையின் மூலம் கிடைக்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் இப்போது எங்களை கவுரமாக வைத்திருக்கிறது பசியில்லாமல் பார்த்துக் கொள்கிறது இதற்கு நன்றியாக நான் இந்த வேலையை சின்சியராக செய்வதுதானே சரியாக இருக்கும்.
உங்கள் வேலையில் கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை சந்திக்க வேண்டி இருக்கும் அது பற்றிய கவலை இல்லையா என்று கேட்ட போது தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன் அதற்கு மேல் இறைவன் விட்ட வழி என்கிறார் கூடுதலாக தன்னைப் போன்றவர்களுக்கு பெரிதும் ஆறுதலாக இருந்து வழிகாட்டுபவர் தனக்கு மேலதிகாரியாக இருக்கும் ஞானவேல் என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார்


இந்த வேலையின் மூலம் நிறைய அன்பு உள்ளங்களை சம்பாதித்து உள்ளேன் இந்த தொடர் சோதனையின் காரணமாக கொரோனா தொற்று கடந்த சில நாளாக வெகுவாக குறைந்து வருகிறது மக்கள் மனதிலும் உடம்பிலும் ஒரு உற்சாகம் தெரிகிறது எனக்குள்ளும் சந்தோஷம் பிறக்கிறது என்று சொல்லும் சந்தோஷிடம் பேசுவதற்காக எண்;9940512591.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
22-ஆக-202013:37:32 IST Report Abuse
NicoleThomson ஐயா சந்தோஷ் நீங்க இப்போ நல்லாஇருக்கீங்களா?
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-ஜூலை-202005:19:58 IST Report Abuse
NicoleThomson கைகளுக்கு காட்டன் கையுறையா? வேண்டாம் தம்பி அவரின் ஏரியாவில் இருக்கும் தினமலர் வாசகர்கள் தயவு செய்து சர்ஜிக்கல் கையுறை கொடுங்களேன்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
19-ஜூலை-202017:16:54 IST Report Abuse
Balaji நல்ல உள்ளம் என்றும் உயர்வை அடையும். வாழ்த்துக்கள் சந்தோஷ். எங்க ஏரியாவுல வர்ற ரெண்டு பேர் கூட சிரிப்பு மாறாத முகத்துடன் சிறந்த பணி செய்கிறார்கள்... பெயர் கேட்கவோ அவர்கள் யார் என்று விசாரிக்கவோ கூட தோன்றியதில்லை... வருந்துகிறேன். வாழ்க இவர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X