பொது செய்தி

இந்தியா

ஐஸ்வர்யா ராய் மற்றும் மகளுக்கும் கொரோனா ; கவலையில் அமிதாப் குடும்பம்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Aishwarya Rai Bachchan, Coronavirus, Corona, Covid-19, tests positive, Aradhya, covid positive, ஐஸ்வர்யாராய், ஆராதயா, மகள், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, அமிதாப்பச்சன்,

மும்பை: அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

77 வயதாகும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சனியன்று மாலை சுவாசப் பிரச்னை ஏற்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிகிச்சையில் உள்ளார். அவருடன் வீட்டில் அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா, பேரக்குழந்தை ஆராதயா ஆகியோரும் வசித்தனர்.

இதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக்கிற்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. ஆனால் ஐஸ்வர்யா, மகள் ஆராதயா, தாய் ஜெயா பச்சனுக்கு கொரோனா ரிசல்ட் நெகடிவ் என்றே வந்தது. இந்நிலையில் ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு வந்த மற்றொரு பரிசோதனை முடிவில் ஐஸ்வர்யா, மகள் ஆராதயா ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமிதாப் விரைவில் நலம்பெற கோவில்கள் பலவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.


latest tamil news




அமிதாப் பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவரிடம் அமிதாப் பயப்படும் படி ஏதுமில்லை லேசான அறிகுறிகளே உள்ளன என கூறியுள்ளார். அதே போல் நடிகர் கமலும் அமிதாப் விரைவில் நலம்பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
12-ஜூலை-202021:53:53 IST Report Abuse
r ganesan அமிதா பச்சன் சென்னை வந்து சித்த வைத்தியம் செய்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். யாராவது அவரிடம் எடுத்து சொல்ல வேண்டும். நம் சித்த வைத்தியத்துக்கும் பெருமை சேர்த்த மாதிரி இருக்கும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஜூலை-202020:54:42 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடபரிதாபமே விநாயகா ஹனுமான் ப்ளீஸ் உங்க அருளால் பூரணகுணம் அடையானும் எல்லோரும் இந்த கொரோனா நம்ம உலகைவிட்டேஒழியனும் என்று நாம் எல்லோரும் வேண்டுவோம் அவரவர் வீட்டுலே இருந்ததுண்டு
Rate this:
Cancel
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
12-ஜூலை-202019:28:50 IST Report Abuse
Ponniyin Selvan ஏழையோ, பணக்காரனோ யாராக இருந்தால் என்ன... ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா என்றால் அக்குடும்பமே நிலைகுலைந்துவிடாதா? இறைவன் அருளால் அக்குடும்பம் மட்டுமல்ல, கொரோனா பாதித்த அனைவரும் பூரண நலம் பெறட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X