பொது செய்தி

இந்தியா

தண்ணீரில் ஆட்டம்போட்ட குட்டி யானை, கண்டிக்கும் தாய்; வைரலாகும் வீடியோ

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Elephant, bath, Tub, twitter, viral video, யானை, குளியல்

புதுடில்லி: சிறுவயதில் நாம் குளிக்கும்போது குளியல் தொட்டியில் அதிக நேரம் இருக்க விடமாட்டார் நமது அம்மா. அதிக நேரம் குளியல் தொட்டியில் ஆட்டம் போட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என குளித்து முடித்தவுடன் தலையில் டவலை வைத்து துடைத்து உடை அணிவித்து விடுவார்.

இதேபோல அதிக நேரம் தண்ணீரில் ஆட்டம்போட்ட குட்டி யானையை தலையில் தட்டிய தாய் யானை ஒன்று, குளித்தது போதும் கிளம்பு என்று கூறும் வீடியோ டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 5,300 பார்வையாளர்களைப் பெற்ற இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்.


latest tamil newsகுட்டி யானை வாங்கிய அடியை பார்த்த நெட்டிசன்கள் பலவித கமெண்டுகளை இட்டனர். இந்த குட்டி யானையைவிட நான் என் தாயிடம் அதிக நேரம் குளித்து அதற்காக அடிகள் வாங்கியுள்ளேன் என ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஜூலை-202016:17:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni அப்போது எனக்கு சின்னவயசுதான் 2ம் கிளாஸ்லே படிச்சுண்டுருந்தேன் ஒரு நாள் தொட்டில் நீர் நெறைய இருக்கவே டபால்னு தொட்டில் குதிச்சு ஆட்டம் அடுத்து என் அண்ணா வந்தார் குளிக்க நான் தொட்டில் இருப்பதைக்கவனிக்கலே குளிச்சுட்டு சொம்பை தண்ணீரிலே வீச அது என் தலைமீது விழுந்து ஒண்ணுளறினேன் தொட்டிலேந்து என்னை எடுத்து என் அண்ணா அம்மாவிடம் கோல் மூட்டிட்டார் என் அம்மா தன பங்குக்கு ரெண்டு மொத்து மொத்தினார் , அப்போதுதான் என் அப்பா பாட்மிண்டன் ஆடிட்டுவந்தவர் இதை பார்த்துட்டு என்ன பேட் ஆல யே அடிச்சுட்டார் . நான் வாங்கிய முதல் அடியே அதுதான் ஈரமான உடம்புலே அடிச்சதால் பேட் லே இருக்கும் வலை அதுஅப்படியே பதிஞ்சு ட்டது அண்ணா அம்மா அடிச்சது வலிக்கலே ஈ ன்னு சிரிச்சுட்டேன் ஜாலியாகுளிச்சேன் என்று சொல்லிண்டு .என் அப்பா யாரையும் குவிக்கவும் மாட்டார் அடிச்சது இல்லே முதல்முறையாக அவர் செய்தது என் அம்மாக்கு அவ்ளோ வியப்பு என் சின்ன அக்கா தான் முதல்லே பேசினா அப்பா என்னாத்துக்கு குட்டிய இப்படி அடிக்குறேல் என்று கேட்டதும் அவர் சமாளிச்சுண்டு இந்த வீட்டுலே தண்ணீர்கஷ்டம் இருக்கே ன்னு என்று சொல்லி மழுப்பிட்டார் ,அன்று மதியமே எனக்கு ஹை பீவர் பாய்ந்ததால் வந்துட்டுது கூடவே எல்லோரும் பயந்து என் அண்ணா போயி குடும்ப வைத்தியர் அழைச்சுட்டுவந்தார் அவர் பாத்துட்டு எதனால் இப்படி என்று கேட்டதும் என் அப்பா தான் மூர்கமா அடிச்சதை சொல்லிட்டார் என் அம்மா க்கும் அப்பா மீது ரொம்பவெகுவாம் உடல் முழுக்க வலையின் அடையாளம். ஐய்யோ மறக்கவேமுடியாது இந்த அனுபவம் அவர் மரணம் வரை எனக்கு அப்பான்னா பயம்தான் ஜுரம் விட்டு நான் தேவலையாக 5 நாட்களாச்சு அவர் நேக்கு சாரி சொல்லியும்கூட என் அக்கா போல நான் அவரிடம் நெருக்கம் காட்டவே இல்லே இப்போதும் மறக்கவேமுடியாத அனுபவம்
Rate this:
Cancel
sivajothi.s - trichy,இந்தியா
17-ஜூலை-202004:19:07 IST Report Abuse
sivajothi.s மனிதா நீ விளைநிலத்தை மனைநிலமாய் மாற்றி விட்டாய் விண்மாரி பொய்த்ததென்றே தூற்று கின்றாய் களைந்தெடுத்தாய் காட்டிலுள்ள மரத்தை யெல்லாம் கதிர்தந்த விளைநிலத்தை நகரம் என்றாய் தெளிநீரில் கழிநீரை கலந்தே விட்டாய் தெருவெங்கும் குடிநீரை தேடு கின்றாய் தெளிவின்றி மனிதாநீ உள்ள தாலே திசைமாறி பெய்யுதையா மாரி தானே - லிசா - பழூர் திருச்சி 621216
Rate this:
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
16-ஜூலை-202008:17:03 IST Report Abuse
pollachipodiyan சளி புடுச்சுக்கும்டா கண்ணா ,ரெண்டு தடவை தும்மினா உனக்கு கொரன னு உன்னை இழுத்த்துட்டு போயுடுனுங்க .அவ்வளவு பெரிய பெட் எங்கேயும் இல்ல .புருஞ்சுக்கோடா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X