தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
கொச்சி: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்.ஐ.ஏ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, அந்நாட்டிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த, 30ம்
கேரளா, தங்கக்கடத்தல், என்ஐஏ, விசாரணை, நீதிமன்ற காவல், ஸ்வப்னா, Gold smuggling case, kerala, Swapna, Sandeep, Kochi, NIA court, remand

கொச்சி: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்.ஐ.ஏ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, அந்நாட்டிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த, 30ம் தேதி, தூதரகத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய்.

இந்தக் கடத்தல் தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய, சர்ஜித் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கடத்தலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில் முன்பு பணியாற்றியவரும், இப்போது, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் ஸ்வப்னா, திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்தீப் நாயர், எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகியோருக்கு, தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


latest tamil news


இதனையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர். ஸ்வப்னா, முன்ஜாமின் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்க, என்.ஐ.ஏ., போலீசாரும், சுங்கத்துறை அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கியிருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப்நாயரை என்.ஐ.ஏ., போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இருவரையும், கொச்சி அழைத்து வந்து என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையை தொடர்ந்து இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Krishnan - Coimbatore,இந்தியா
12-ஜூலை-202019:55:35 IST Report Abuse
Hari Krishnan காரல் மார்க்சின் காரல் அதிகமாக கேட்கிறது கேரளாவிலிருந்து ஒரு ரிப்போர்ட் சொல்கிறது "ஏறக்குறைய மாதம் 5000 கோடி ரூபாய்க்கான கருப்புப்பண தங்கவியாபாரம் மாநில அரசின் அறிவுடன் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது." என்று. தங்க வியாபாரத்தின் ஏறக்குறைய 20% சதவிகிதம் கருப்புப்பணத்தால் நடக்கிறது. இதற்க்கு மௌனஅனுமதி அளித்து ஊக்குவிப்பது "ஏழை மக்களின் குரல்" என்று இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் இடது பார்வை ஊடகங்களாலும் ஒற்றைக்குரலாக ஓங்கி முழங்கிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் தான். என் ஐ ஏ வின் ஸ்வப்னா வேட்டையால் இன்று வெளிப்பாட்டுக்கொண்டிருப்பது இதன் பின்னணி தான். காரல் மார்க்சின் சித்தாந்தம் பினராயி விஜயனின் காரல் ஆக மாறியதின் பின்னணி.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜூலை-202019:05:30 IST Report Abuse
blocked user இப்படிப்பட்ட கிரிமினல்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காவலர்களுக்கு என்ன ஒரு அவமானம்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜூலை-202018:56:03 IST Report Abuse
Lion Drsekar தவறு செய்தவர்கள் செய்பவர்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பாதுகாப்பான அரண்மனை சிறைச்சாலைகள், வெளியே வந்தவுடன் மீண்டும் அரசு செலவில் முக்கிய பிரமுகர்களாக அவர்களுடைய வாக்காளர் மாற்றிவிடுவார்கள், நாம்தான் தினம் இதுபோன்ற செய்திகளை படித்து மற்றவர்களிடத்தில் பகிர்ந்தது கொண்டு வாழ்க்கையையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம், அவர்களுக்கு ஒவ்வொருநாளும் இதுபோன்ற நடவடிக்கைகள் வாழ்க்கையின் ஏற்றம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X