காங்கிரசை நினைத்து வருத்தமாக இருக்கிறது: கபில் சிபல் கவலை

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
Kapil Sibal, Cong, Congress, Rajasthan, Worried for Congress, Kapil Sibal, Sachin Pilot, Delhi, MLAs, கபில்சிபல், கவலை, காங்கிரஸ், ராஜஸ்தான்

புதுடில்லி: காங்கிரசை நினைத்து வருத்தமாக உள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.


latest tamil news


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி பாஜ.,வினர், காங்., எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளதாக அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த பாஜ., ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைக்கக்கூடாது எனவும், குதிரை பேரம் நடத்தியதற்கான ஆதாரங்களை காட்டாவிட்டால் அரசியலில் இருந்து விலக தயாரா எனவும் பாஜ., கூறியிருந்தது.


latest tamil news


இந்நிலையில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் தங்களது ஆதரவு எம்எல்ஏ.,க்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். ராஜஸ்தானில் நிலவி வரும் பரபரப்பாஜ சூழல் குறித்து காங்., மூத்த தலைவர் கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛காங்கிரசை நினைத்து வருத்தமாக இருக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் குழப்பத்துக்கு விரைந்து தீர்வு காணுங்கள். எப்போது கட்சியின் தலைமை விழித்துக்கொள்ளப் போகிறது? லாடத்திலிருந்து குதிரைகள் அனைத்தும் தப்பி ஓடிய பின்பு தான் விழித்துக்கொள்ளப் போகிறோமா?' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
19-ஜூலை-202007:44:22 IST Report Abuse
vnatarajan காங்கிரஸ் தலைமை பதாவியை திரு சிதம்பரம் அவர்களுக்கு கொடுத்துவிட்டு அம்மாவும் பையனும் விளங்கிக்கொள்வது நல்லது. ஏனென்றால் திரு சிதம்பரம் தான் தற்போதைய மூத்த டியேல்ல விதத்திலும் அனுபவமிக்க தலைவர்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-ஜூலை-202018:07:38 IST Report Abuse
madhavan rajan இந்திய மக்களில் பலர் காங்கிரஸ் அரசு இத்தனை நாட்கள் செய்த அராஜகத்தை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தடையின்றி கொள்ளையடிக்க முடியவில்லையென்று உங்களுக்கே வருத்தம் வந்துவிட்டது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஜூலை-202014:39:04 IST Report Abuse
r.sundaram காங்கிரஸ் கட்சி இந்த நிலைமைக்கு வந்ததில் சிபலுக்கும் பங்கு உண்டு. சோனியாவின் தமையை ஆதரித்தீர்கள் அல்லவா? தற்போது வருந்தி என்ன பயன், செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால் என்ன நடக்கும் என்பதை தற்போது புரிந்து கொள்ளலாம். முதல் குடும்பம் மட்டுமே காங்கிரசுக்கு தலைமை ஏற்க வேண்டுமா? கட்சியில் தகுதி உள்ள வேறு நபர் இல்லை? தகுதியான தலைமை இல்லை என்பதே காங்கிரஸ் கட்சியின் இன்றய நோய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X