அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக என்றாலே வன்முறை கலாசாரம் தானா: ஜெயக்குமார் கேள்வி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
அமைச்சர், ஜெயக்குமார், திமுக, கலாச்சாரம், வன்முறை

சென்னை: தி.மு.க.,வில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாகவும், திமுக என்றாலே வன்முறை கலாச்சாரம் தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு பகுதியில் திமுக எம்.எல்.ஏ., இதயவர்மனுக்கும், இமயம் குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (11ம் தேதி) மாலை வாக்குவாதம் முற்றிய நிலையில் சிலர் ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். இதனால் எம்.எல்.ஏ., தற்காப்பிற்கு துப்பாக்கியால் சுட்டார். இதில் இமயம்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார், காயத்துடன் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கியால் சுட்டதால் இந்த சம்பவம் பரபரப்பானது.


latest tamil news


இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பு அதிகமாக இருந்தது. வன்முறையும் ஊழலும், நில அபகரிப்பும் தி.மு.க.,வுக்கே உரிய ஒன்று. சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது. தி.மு.க.,வினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202000:13:30 IST Report Abuse
நக்கல் இந்த தலைப்புக்கு பதில் "ஆமாம்"...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-ஜூலை-202023:22:39 IST Report Abuse
konanki உபியில் எங்கோ ஒரு மூலையில் ஓரு பாஜக சாதா உறுப்பினர் - எம் எல் ஏ இல்லை- வன்முறை செய்தால் பாஜக தலைவர் சுட்டார் என்று 4 நாட்களுக்கு செய்தி போடும்/விவாதங்கள் நடத்தும் தமிழக ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் திமுக எம் எல் ஏ செய்த வன்முறையை 30 நொடி செய்தியா போகிற போக்கில் கட்சி பேர் சொல்லாமல்சொல்லி போய்விடும். செஞ்சோற்று கடன்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-ஜூலை-202023:15:43 IST Report Abuse
konanki ஏங்க தப்ளிகீன் மாநாட்டு செய்தியை மத மாநாடு என்று போட்டு பிராமணர் போட்டோ போட்ட தந்தி டிவி வேறு எப்படி செய்தி போடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X