பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜருக்கு மரியாதைநாடார் சங்கம் கோரிக்கை

Added : ஜூலை 12, 2020
Share
Advertisement

சென்னை :

'காமராஜர் பிறந்த நாளில், அவரது நினைவு இல்லத்தில், சமூக இடைவெளி பின்பற்றி, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, அனுமதிக்க வேண்டும்' என, அரசுக்கு, தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க ஆலோசனை கூட்டம், இணையதளம் வழியே நடந்தது. சங்கத் தலைவர் முத்துரமேஷ் தலைமை வகித்தார். மாநில செயலர்கள் இன்பசேகர், சபாபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சிவந்திஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்கும், சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியதற்கும், காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாட அரசாணை வெளியிட்டதற்கும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள். அன்று, சென்னை தியாகராய நகர் மற்றும் விருதுநகரில் உள்ள, அவரது நினைவு இல்லங்களில், சமூக இடைவெளியை பின்பற்றி, பொதுமக்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்த, அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காமராஜர் பிறந்த நாளில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், கையுறை, ஓமியோபதி நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X