மஹா.,வில் புதிதாக 7,827 பேருக்கு கொரோனா; 173 பேர் பலி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020
Share
Advertisement
Maharashtra, Mumbai, Corona Virus, Covid19, மஹா, மஹாராஷ்டிரா, மும்பை, கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 173 பேர் பலியாகினர்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 12) மட்டும் 7,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,54,427 ஆக அதிகரித்தது.

இன்று மட்டும் 173 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 10,289 ஆக உயர்ந்தது. இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,40,325 ஆக உயர்ந்தது.


latest tamil news



மும்பையில்...


மும்பையில் இன்று மட்டும் 1,263 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 44 பேர் பலியான நிலையில், 1,441 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,720 ஆகவும், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,285 ஆகவும் அதிகரித்துள்ளது. 64,872 பேர் குணமாகியுள்ள நிலையில், 22,556 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X