கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் 'சிவப்பு': நட்டா தாக்கு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
bjp,nadda,kerala,ldf,udf,JP Nadda, நட்டா, கேரளா

புதுடில்லி: 'கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் 'சிவப்பு' என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், பா.ஜ., அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. டில்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வழியாக இதனை திறந்து வைத்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.


latest tamil news



தென் மாநிலங்களில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தனது கொடியை நிச்சயம் பா.ஜ., ஊன்றும். தங்கத்தின் நிறம் மஞ்சள்; ஆனால் கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் 'சிவப்பு'. தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளது.


ராகுலுக்கு தேச பக்தி கிடையாது:


டோக்லாம் பிரச்னையின் போது, சீன தூதரை ராகுல் சந்தித்ததை மறைத்து, தேசத்தை தவறாக வழிநடத்தினார். சந்திப்பின் போது எடுத்த போட்டோவை சீன தூதர் பகிர்ந்த பின் தான் அது அனைவருக்கும் தெரியவந்தது. அவருக்கு தேச பக்தி சிறிதும் கிடையாது. பாதுகாப்புக்கான பார்லி., நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்தவர் ராகுல். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
12-ஜூலை-202022:25:25 IST Report Abuse
அறவோன் சாபக்கேடு saffron
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X